முந்தய பக்கம்

எல்லாம் விளையாட்டு - ப.முருகன்

20 Jun 2026, 8:39 pm
எல்லாம் விளையாட்டு -  ப.முருகன்

எல்லாம் விளையாட்டு -  ப.முருகன்

விளையாட்டுகளில் அரசியல் புகுந் து வெகுகாலமாகிவிட்டது

இது புராண காலத்தில் இதிகாச நாயகர்கள் வெற்றிக்காகப் புகுந்தது

சீடன் அர்ஜுனனுக்காக தானே வில்வித்தை கற்ற பழங்குடிவீரன் ஏகலைவனின் கட்டை விரலை காவு வாங்கியது துரோணாச்சாரியியம்

வீரன் கர்ணனை விளையாட்டிலேயே பங்கேற்க விடாமல் குலம் என்ன? கோத்திரம் என்ன? சாதி என்ன? சத்திரியனா? என்றெல்லாம் கேள்விக்கணைகளை சரம் சரமாய்த் தொடுத்து சங்கடப்படுத்தி அவமானப்படுத்தி தன்னிகரில்லா வீரனை தலை குனிந்த படி வெளியேறச் செய்ததும் துரோணாச்சாரியியம் தான்

இக்கால சனாதனத்தின் அக்காலத்திய அடிச்சுவடு அது

வேத மந்திரங்கள் கற்க முயன்றோர் நாக்கை அறுத்தது காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது. அவர்களின் குலப் பெண்களுக்கே கூட அருகதையில்லை என்றது அந்தகால இந்துத்துவம் அதாவது மநுயிசம்

இப்போது கூட தேசிய கல்விக்கொள்கை எனும் புதிய அவதாரம்

இது உலகளாவியது கார்ப்பரேட்டுகளுக்கு எல்லாமே விளையாட்டுதான் அரசியல்வாதிகள் அவர்களின் கைப்பொம்மைகள் அவர்கள் நினைத்தபடி இவர்கள் விளையாடுவார்கள் வெனிசுலாவில் புகுந்து ராஜா ராணியை வெட்டி அல்ல கட்டித் தூக்கிச் சென்றது கார்ப்பரேட் விளையாட்டே! நீதி நியாயம் எல்லாம் கண்களைக் கட்டிக் கொள்ளும்

இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் அந்த விளையாட்டுதானே நடக்கிறது மக்கள் எதிர்க்கேள்வி கேட்காதிருக்க பிள்ளை விளையாட்டென இராமலிங்கர் சொன்ன மார்க்கத்தை தங்களின் கேடயமாக்கிக்கொள்ளும் திறன்படைத்தவர்கள்

மநுவுக்கு மிஞ்சிய சட்டமில்லை என்பதே அவர்களது திட்டம் அவர்களது தொழில் தவிர எல்லாமே அற்பமானது தான் அவர்கள் குரலை எல்லா வர்ணங்களிலும் எதிரொலிக்க செய்தார்கள் விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்று சொன்னது கூட அப்படித்தான். - ப.முருகன்

Share
FacebookXWhatsAppTelegram