தீக்கதிர் முக்கிய செய்திகள்
18 Mar 2026, 3:34 pm

வளர்ச்சிக்கான அரசியலே வெற்றி பெறும்: முதல்வர்

சென்னை: அதிமுகவினரின் சர்ச்சைப் பேச்சுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து உள்ளார். “சொல்வதற்குச் சாதனைகளும் - செயல்படுவ தற்குக் கொள்கைகளும் இல்லாதவர்கள் ஆபாசங்களை யும் அவதூறுகளையும் அள்ளி இறைத்துக் கொண்டி ருக்கின்றனர். நாங்கள் சாதனைகளையும்ம், பயனடைந்த வர்களின் தரவுகளையும் சொல்லிக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டு மக்கள் அனைத்தையும் கவனித்து வருகின்ற னர்.வளர்ச்சியை தரும் விடியலையே மக்கள் தேர்ந்தெ டுப்பார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.

ஆதவ் அர்ஜுனா வழக்கு மீண்டும் விசாரணை

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தொடர்ந்து, த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்ட கருத்து தொடர்பான வழக்கை நீதி பதி ஜெகதீஷ் சந்திரா கடந்த நவம்பரில் ரத்து செய்தார். அந்த உத்தரவை எதிர்த்து சண்முகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததை, நீதி மன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது. அடுத்த வாரம் இம்மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படு கிறது.

தேர்தலுக்காக நான்கு லட்சம் பணியாளர்களுக்கு பயிற்சி

சென்னை: 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, மாவட்ட தேர்தல் அதிகாரிகள் முதல் வாக்குச் சாவடி அலுவலர்கள் வரை சுமார் நான்கு லட்சம் பணியாளர் களுக்கு படிப்படியான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வரு கிறது. பிப்ரவரி மாதம் தொடங்கி மாநில அளவிலான முதன்மை பயிற்சியாளர்களுக்கும், மார்ச் மாதம் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப பயன்பாடு குறித்தும் பயிற்சிகள் நடத்தப்பட்டுள்ளன. “தேர்தல் திரு விழா தமிழகத்தின் பெருவிழா” என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.

ரூ. 42.65 கோடி மதிப்பிலான பணம் - பொருட்கள் பறிமுதல்

சென்னை: தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனைகளில் மார்ச் 18 நிலவரப் படி ரூ.42.65 கோடி மதிப்பிலான பணம்-பொருட்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ. 2.37 கோடி ரொக்கம், ரூ. 2.88 கோடி போதைப்பொருட்கள், ரூ.16.42 கோடி விலை மதிப்பற்ற உலோகங்கள், ரூ. 20.80 கோடி இலவசப் பொருட்கள் ஆகியவை உள்ளடங்கும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்தார்.

தேர்தல் செலவுக்கான உணவு விலை பட்டியல்

சென்னை: ஏப்ரல் 23 அன்று நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்கீட்டிற்கான உணவு விலைப்பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதன்படி காபி ரூ. 18, டீ ரூ. 12, இட்லி (2) ரூ. 40, சைவ சாப்பாடு ரூ. 110, சிக்கன் பிரியாணி ரூ. 110, மட்டன் பிரியாணி ரூ.180 என விலைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

அதிமுக-வினர் ஊழல் அமலாக்கத்துறை விசாரணைக்கு திமுக கோரிக்கை

சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகள் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, வீரமணி, விஜயபாஸ்கர் உள்பட 7 பேர் மீது சட்ட விரோ தப் பணப் பரிமாற்றச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று கோரி திமுக எம்.பி. கிரிராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியே வழக்கு தொடர்ந்துள்ளார்.