“அரசியல் சார்பு கொண்ட நீதிபதிகள் அதிகளவில் நியமிக்கப்படுகிறார்கள்”
16 May 2026, 9:02 pm
<p><strong>“அரசியல் சார்பு கொண்ட நீதிபதிகள் அதிகளவில் நியமிக்கப்படுகிறார்கள்” </strong></p><p>நாட்டில் அரசியல் சார்பு கொண்ட நீதிபதிகள் அதிக ளவில் நியமிக்கப்படுகி றார்கள் என மேகா லயா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சிப் பானர்ஜி குற்றம் சாட்டியுள் ளார். இதுதொடர்பாக இந்தியா டுடே ஊட கத்திற்கு அவர் அளித்த பேட்டி யில்,“ஒரு முன்னாள் நீதிபதியாக நான் மிகுந்த வருத்தமும் மனவேதனையும் அடைகிறேன். காரணம் கடந்த 10-12 ஆண்டுகளில் நீதித்துறையில் நடந்துள்ள நியமனங்கள் எனக்கு பெரும் அதிர்ச்சியைத் தருகின்றன. அரசியல் சார்பு கொண்ட நீதிபதிகள் அதிகளவில் நியமிக்கப்பட்டு வருகின்ற னர். இது நீதித்துறைக்குச் செய்யப் படும் மிகப் பெரிய துரோகமாகும்” என்று கூறினார். ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு நெருக்க மான நபரான ஸ்வர்ணா காந்தா சர்மா தில்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணி யாற்றி வருவது தொடர்பான சமீபத்திய சர்ச்சையின் பின்னணியில் முன்னாள் நீதிபதி சஞ்சிப் பானர்ஜி இந்த கருத் துக்கள் மூலம் குற்றம்சாட்டியுள்ளார்.</p>
