முந்தய பக்கம்

இளம் கம்யூனிஸ்டுகளுக்கு அரசியல் பயிற்சி வகுப்பு

3 Jan 2026, 4:57 pm
இளம் கம்யூனிஸ்டுகளுக்கு   அரசியல் பயிற்சி வகுப்பு
<p><strong>இளம் கம்யூனிஸ்டுகளுக்கு &nbsp; அரசியல் பயிற்சி வகுப்பு</strong></p> <p>நாகப்பட்டினம், ஜன.3- &nbsp;மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டக் குழு சார்பில், கீழ்வேளூர் தெற்கு ஒன்றியம் சாட்டியகுடியில், இளம் கம்யூனிஸ்டுகளுக்கான &nbsp;அரசியல் பயிற்சி வகுப்பு, கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினருமான வி.பி. நாகைமாலி தலைமையில் நடைபெற்றது. &nbsp;&ldquo;இன்றைய அரசியல் சூழ்நிலை&rsquo;&rsquo; என்ற தலைப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் டி. ரவீந்திரனும், &ldquo;அடையாள அரசியல்&rsquo;&rsquo; என்ற தலைப்பில் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி. ரமேஷ்பாபு, &ldquo;தமிழக - தஞ்சை -செங்கொடி இயக்க வரலாறு&rsquo;&rsquo; என்ற தலைப்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் அரசியல் வகுப்பு எடுத்தனர். &nbsp;31 வயதுக்கு உட்பட்ட 150 கட்சி உறுப்பினர்களுக்கு நடத்தப்பட்ட இந்த பயிற்சியில், கட்சியின் வரலாறு குறித்தும், தஞ்சை மாவட்டத்தினுடைய போராட்ட வரலாறு குறித்தும் எதிர்கால இயக்கங்கள் குறித்தும் வகுப்பு நடைபெற்றது.</p>
Share
FacebookXWhatsAppTelegram