சட்டமேதை அம்பேத்கர் நினைவு தினம் அரசியல் கட்சிகள்-அமைப்புகள் மரியாதை
6 Dec 2025, 6:20 pm
<p><strong>சட்டமேதை அம்பேத்கர் நினைவு தினம் அரசியல் கட்சிகள்-அமைப்புகள் மரியாதை</strong></p>
<p>திருச்சிராப்பள்ளி, டிச.6 - சட்டமேதை பி.ஆர். அம்பேத்கரின் 69 ஆவது நினைவு தினத்தையொட்டி மாநிலம் முழுவதும் இடது சாரிக் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி கள், எழுத்தாளர்-கலைஞர்கள், வெகுஜன அரங் கங்களின் சார்பில் அவரது உருவப்படத்திற்கு, சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இதனொரு பகுதியாக, திருச்சிராப்பள்ளி, தஞ்சா வூர், புதுக்கோட்டை, மன்னார்குடி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் மரியாதை செலுத்தப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சனிக் கிழமை திருச்சி அரிஸ்டோ ரவுண்டானாவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி மாநகர் மாவட்டச் செயலாளர் கோவி. வெற்றி செல்வம் தலைமையில் நடைபெற்றது. மாநில கட்டுப்பாட்டுக் குழு தலைவர் ஶ்ரீதர் மாலை அணிவித்தார். புறநகர் மாவட்டச் செயலாளர் சிவ ராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜா, லெனின், ரேணுகா, மூத்த தோழர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் தஞ்சையில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசி யல் தலைமைக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் ஆர்.மனோகரன், பி.செந்தில் குமார், கே.அபிமன்னன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் கே. பன்னீர்செல் வம், செயலாளர் ஆர். கலைச்செல்வி, துணைச் செய லாளர்கள் ஆர்.பிரதீப்ராஜ்குமார், வீ.கரிகாலன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர்கள் என்.குரு சாமி, இ.வசந்தி, உள்ளிட்ட அனைத்து சங்க தோ ழர்கள் பங்கேற்றனர். முன்னதாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப் பட்டது. பட்டுக்கோட்டையில், தமிழ்நாடு மருந்து விற் பனை பிரதிநிதிகள் சங்கம் சார்பாக டாக்டர் அம்பேத் கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் குலோத்துங்கன், மோரிஸ் அண் ணாதுரை, ஜெய்சீலன், சுரேஷ் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். கும்பகோணம் அரசு போக்குவரத்து பணி மனை முன்பு அண்ணல் அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ் வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் எம்.கண்ணன், மாநகரச் செய லாளர் செந்தில்குமார், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநகரச் செயலாளர் பழ.அன்புமணி, விடுதலை சிறுத்தை கட்சி முன்னாள் மண்டல செய லாளர் விவேகானந்தன், மாவட்டச் செயலாளர் முல்லை வளவன், மாநகரச் செயலாளர் கோ. ராஜ் குமார், சிபிஐ மாவட்டச் செயலாளர் மு.அ. பாரதி, சிபி எம்எல் மாநகரச் செயலாளர் மதியழகன் உள்ளிட்ட அனைத்து இயக்கங்கள் சார்பில் ஏராளமானார் கலந்து கொண்டனர். புதுக்கோட்டை புதுக்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் சிஐடியு சார்பில் சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. சிபிஎம் சார்பில் மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் தலைமையில் செயற்குழு உறுப்பினர்கள் துரை. நாராயணன், எஸ்.ஜனார்த்தனன், கி.ஜெயபால், மாநகரச் செயலாளர் எஸ்.பாண்டியன், மாவட்டக் குழு‌ உறுப்பினர்கள் பி.சுசிலா, எஸ்.பாண்டிச் செல்வி உள்ளிட்டோரும், விதொச சார்பில் மாநிலத் தலைவர் எம்.சின்னதுரை எம்எல்ஏ தலைமையில் மாவட்டத் தலைவர் கே.சண்முகம், செயலாளர் டி. சலோமி‌ உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினர். தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செய லாளர் எஸ்.கவிவர்மன் தலைமையில் மாவட்டத் தலைவர் சி.அன்புமணவாளன் உள்ளிட்டோரும், சிஐடியு சார்பில் மாவட்டச் செயலாளர் ஏ.ஸ்ரீதர் தலைமையில் மாவட்டத் தலைவர் கே.முகமதலி ஜின்னா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். பொன்னமராவதி பொன்னமராவதியில் நடைபெற்ற நினைவு தின கூட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி யின் நகரச் செயலாளர் மலை.தேவேந்திரன் தலைமை வகித்தார். விசிக நிர்வாகிகள் சுடர் வளவன், மணி முத்து, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன், ஒன்றிய குழு உறுப்பினர் குமார், சிபிஐ ஏனாதி ராசு, திமுகவின் ஆலவயல் முரளி சுப்பையா, திராவிட கழகத்தின் ஆறுமுகம், மனோகரன், மே 17 இயக்க ஹைதர் அலி ஆகியோர் பங்கேற்றனர். மயிலாடுதுறை மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம், மேலப்பெரும்பள்ளம் கிராமத்தில் அமைந் துள்ள அம்பேத்கர் சிலைக்கு அமைச்சர் மெய்ய நாதன், சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பவுன்ராஜ், மார்க்சிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் கே.பி. மார்க்ஸ், மாவட்டக்குழு உறுப்பினர் கண்ணகி, ஒன்றியக்குழு உறுப்பினர் தோட்டம் ஜோதி, மேலப்பெரும்பள்ளம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஊராட்சி செயலர் சக்திவேல் மற்றும் ஊழியர்கள், பல்வேறு கட்சி பிரமுகர்கள், கிராம நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். நாகப்பட்டினம் நாகப்பட்டினம் குறிச்சி கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு கீழ்வேளூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வி.பி.நாகைமாலி மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். அவருடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியச் செயலாளர் ஏ.வடிவேல், மாவட்டக் குழு உறுப்பி னர் கே.செந்தில்குமார், டி.அருள்தாஸ், எம்.ஜோதி பாசு, இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலா ளர் முகேஷ் கண்ணா, கட்சி ஒன்றியக் குழு உறுப் பினர் ஞானசேகரன் ஆகியோர் உடனிருந்தனர். பெரம்பலூர் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அம்பேத்கர் உருவச் சிலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கட்சியின் மாவட்டச் செயலாளர் ரமேஷ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என்.செல்லத்துரை, எ.கே.ராஜேந்திரன், ஆலத்தூர் ஒன்றியச் செயலாளர் எஸ்.பாஸ்கரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலை வர் எம்.கருணாநிதி, தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் சங்கம் மாவட்ட துணைத் தலைவர் எழுத்தா ளர் அகவி, வேப்பந்தட்டை ஒன்றியக் குழு உறுப்பினர் சதாசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அரியலூர் சிபிஎம் அரியலூர் ஒன்றியச் செயலாளர் அருண்பாண்டியன் தலைமையில் அம்பேத்கரின் உருவச் சிலைக்கு மாவட்டச் செயலாளர் எம்.இளங் கோவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி னார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.கிருஷ்ணன், பி.துரைசாமி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எஸ்.மலர்கொடி, மூத்த தலைவர் சிற்றம்பலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆண்டிமடத்தில் ஒன்றியச் செயலாளர் வேல் முருகன் தலைமையிலும், செந்துறையில் வட்டச் செயலாளர் கு.அர்ச்சுணன் தலைமையிலும், தா. பழூரில் ஒன்றியச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் தலைமையிலும், ஜெயங்கொண்டத்தில் எம்.வெங்க டாசலம் தலைமையிலும், திருமானூர் ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் எஸ்.பி.சாமிதுரை தலைமை யிலும் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணி வித்து மரியாதை செலுத்தப்பட்டது. மன்னார்குடி மன்னார்குடியில் சிபிஎம் நகரக் குழு சார்பில் நகரச் செயலாளர் ஜி.தாயுமானவன், அம்பேத்கரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் நகரக் குழு உறுப்பி னர்கள் கே.பிச்சைக்கண்ணு, சகாயராணி, தமுஎகச மாவட்டப் பொருளாளர் யு.எஸ்.பொன்முடி, விவசாயி கள் சங்க பொருளாளர் ஜி.மாரிமுத்து, கிளைச் செய லாளர் யு.கவியரசன், வி.காமராஜ், வி.கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமுஎகச சார்பில் மாவட்டப் பொருளாளர் யு.எஸ். பொன்முடி மாலை அணிவித்தார். கே.வி. பாஸ்கர், பிஎஸ்என்எல் சார்பில் கே.பிச்சைக்கண்ணு, கே.ஆர். பாஸ்கர், வி.சி.க. சார்பில் மாநில செயற்குழு உறுப்பி னர் வ.பார்வேந்தன் ஆகியோர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.</p>
