தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பாறைக்குழியில் குப்பை கொட்ட முயற்சி எதிர்த்த அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கைது

25 Dec 2025, 6:14 pm
பாறைக்குழியில் குப்பை கொட்ட முயற்சி எதிர்த்த அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கைது
<p><strong>பாறைக்குழியில் குப்பை கொட்ட முயற்சி எதிர்த்த அரசியல் கட்சியினர், பொதுமக்கள் கைது</strong></p> <p>திருப்பூர், டிச.25- திருப்பூர் மாநகராட்சி குப்பையை ஊத்துக்குளி அருகே பாறைக்குழியில் கொட்ட முயன்ற மாநகராட்சி வாகனங்களை தடுத்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர் மற் றும் பொதுமக்கள் கைது செய்யப் பட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாநகராட்சியில் நில வும் குப்பை பிரச்சினைக்குத் தீர்வு காண திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்த நடவ டிக்கை எடுத்து வருவதாக நிர்வா கம் தெரிவித்து வருகிறது. இந்நிலை யில், வியாழனன்று பலத்த போலீஸ் &nbsp;பாதுகாப்புடன் நான்கு லாரிகளில் குப்பைகள் ஊத்துக்குளி பேரூ ராட்சி வெள்ளியம்பாளையம் பாறைக்குழிக்கு கொண்டு வரப் பட்டன. இதனையறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.குமார், &nbsp;இந்திய கம்யூனிஸ்ட் தாலுகா செய லாளர் வி.ஏ.சரவணன், காங்கிரஸ் நிர்வாகி மனோஜ்குமார் மற்றும் பொதுமக்கள் லாரிகளை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர். பாது காப்புப் பணியில் இருந்த போலீ சார், போராட்டத்தில் ஈடுபட்டவர் களை கைது செய்தனர். இதுகுறித்து சி.பி.எம் நிர்வாகி ஆர்.குமார் கூறுகையில், &ldquo;கடந்த ஆகஸ்ட் மாதம் இதேபோல் குப்பை கொட்ட முயன்றபோது கடும் எதிர்ப்பு கிளம்பியது. அப் போது நடந்த அமைதிப் பேச்சு வார்த்தையில், வருவாய் மற்றும் &nbsp;மாநகராட்சி அதிகாரிகள் இனி &nbsp;இங்கு குப்பை கொட்ட மாட்டோம் &nbsp;என உறுதியளித்தனர். ஆனால், &nbsp;தற்போது எவ்வித முன்னறிவிப்பு மின்றி மீண்டும் குப்பையைக் &nbsp;கொண்டு வருவது கண்டிக்கத்தக் கது. கிராமப்புறங்களில் பாதிப்பை ஏற்படுத்தாமல், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் அறிவியல் ரீதியான நிரந்தரத் தீர் வை மாநகராட்சி காண வேண் டும்&rdquo; என்றார். கைது செய்யப்பட்டவர்களை திமுக ஈரோடு மத்திய மாவட்ட செய லாளர் தோப்பு வெங்கடாசலம் மற்றும் பெருந்துறை அதிமுக எம். எல்.ஏ ஜெயக்குமார் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவு தெரி வித்தனர். கிராமப்புறங்களில் குப்பை கொட்டும் நடவடிக்கைக்கு அவர்களும் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். அனைத்து தரப்பினரின் போராட்டத்தைத் தொடர்ந்து, குப்பை லாரிகள் மீண்டும் திருப்பூர் &nbsp;நோக்கித் திருப்பி அனுப்பப்பட் டன. &ldquo;ஒருபுறம் மேலாண்மைத் திட் டம் எனக்கூறிவிட்டு, மறுபுறம் பாறைக்குழிகளைத் தேடுவது மாந கராட்சி நிர்வாகத்தின் மீது சந் தேகத்தை ஏற்படுத்துகிறது&rdquo; என &nbsp;பொதுமக்கள் அதிருப்தி தெரி வித்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.