தீக்கதிர் முக்கிய செய்திகள்
8 May 2026, 9:22 pm

சிபிஐ எம்.பி., சந்தோஷ்

சட்டப்பேரவையில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள கட்சியையே அரசு அமைக்க முதலில் அழைக்க வேண்டும். இதுவே பாஜகவாக இருந்திருந்தால், இந்த ஆளுநரின் அணுகுமுறை எப்படி இருந்திருக்கும்? மற்ற பல மாநிலங்களில் தனிப்பெரும் கட்சிகளே அரசு அமைக்க அழைக்கப்பட்டுள்ளன. எனவே, எவை முதலில் நடக்க வேண்டுமோ அவை முறையாக நடக்க வேண்டும்.

திரிணாமுல் எம்.பி., மஹுவா மொய்த்ரா

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைக்க உள்ளது. ஆனால் மாநிலத்தில் அரசியலமைப்புச் சட்டமே இறுதியானதாக இருக்கும். திரிணாமுல் காங்கிரஸ் மதச்சார்பற்ற நாட்டிற்காக தொடர்ந்து உறுதியுடன் நின்று போராடும். ஆட்சியை கைப்பற்றினால் மேற்கு வங்கம் காவியாகிவிடும் என்று பாஜக கணக்குப் போடுகிறது. இது நடக்காது.

யுவதேஷ் சமூக ஊடகம்

மேற்கு வங்கத்தில் பாஜக வெற்றி பெற்றவுடன் அரசு ஊழியர்கள் கொண்டாடியுள்ளனர். இதுபோன்று எந்த மாநிலத்திலும் அரங்கேறியது இல்லை. கொண்டாடும் அளவிற்கு மேற்கு வங்க அரசு ஊழியர்களுக்கு பாஜக அப்படி என்ன கொடுத்தது? பாஜக கொடுத்த பரிசால் அரசு ஊழியர்கள் முறைகேடு செய்தனரா?

ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா

தமிழ்நாட்டில் ஆளுநர் மூலம் குழப்பத்தை ஏற்படுத்த சதி நடக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி பார்த்தால், தமிழகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படக் கூடாது. விஜய் அரசு அமைக்க அனுமதிக்கப்பட வேண்டும்.