தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மகளின் பிணத்தில் அரசியல் ஆதாயம்! பாஜகவின் ‘பானிஹட்டி’ பாசக் கயிறு!

29 Mar 2026, 3:34 pm
மகளின் பிணத்தில் அரசியல் ஆதாயம்!  பாஜகவின் ‘பானிஹட்டி’ பாசக் கயிறு!
<p><strong>மகளின் பிணத்தில் அரசியல் ஆதாயம்! &nbsp;பாஜகவின் &lsquo;பானிஹட்டி&rsquo; பாசக் கயிறு!</strong></p> <p>பெண்களுக்கு எதிரான குற்றங் களில் முதலிடம் வகிக்கும் பாஜக, மேற்கு வங்கத்தில் ஒரு தாயின் &nbsp;துயரத்தை அரசியல் அறுவடை செய்யத் துணிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. பானிஹட்டி தொகுதியும்... பாஜகவின் தந்திரமும்! நாடு முழுவதையும் உலுக்கிய கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனை வன்கொடுமைச் சம்பவத்தில் உயி ரிழந்த பெண் மருத்துவரின் தாயாரைப் பானிஹட்டி தொகுதி வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. தான் ஆளும் மாநி லமான உத்தரப் பிரதேசத்தில் ஹாத்ரஸ், உன்னாவ் எனப் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள் தொடரும்போது மௌனம் காக்கும் பாஜக, வங்காளத்தில் மட்டும் &lsquo;பெண் பாதுகாப்பு&rsquo; வேடம் போடுவது பச்சைக் கண்ணாடி அணிந்த கதைதான். மல்யுத்தம் முதல் &nbsp;மணிப்பூர் வரை! தன் கட்சி எம்.பி. பிரிஜ் பூஷன் மீது &nbsp;மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்தபோது கண்டுகொள்ளா ததும், மணிப்பூரில் பெண்கள் நிர்வாண மாக்கப்பட்டபோது வேடிக்கை பார்த்ததும் தான் பாஜகவின் உண்மையான முகம். குஜராத்தில் பில்கிஸ் பானு குற்றவாளி களை &lsquo;சான்ஸ்காரிகள்&rsquo; என விடுவித்த பெருமையும் இவர்களுக்கே உண்டு! 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029-க்குத் தள்ளி வைத்திருக்கும் இவர்கள், இப்போது ஒரு தாயின் கண்ணீரைத் தேர்தல் வாக்குகளாக மாற்றப் பார்க்கிறார்கள். இடதுசாரிகளின் நெஞ்சுரம்! பாதிக்கப்பட்ட பெற்றோர் இப்போது பாஜகவின் வழிகாட்டுதலில் இடதுசாரி களை விமர்சித்தாலும், சிபிஎம் வேட்பாளர் கலாத்தன் தாஸ்குப்தா மிகத் தெளிவாகப் பதிலடி கொடுத்துள்ளார்: &ldquo;நாங்கள் அந்த பெண் மருத்துவரின் உடலை ஏந்திச் &nbsp;சென்ற வாகனத்தை மறித்துப் போராடிய போது, அந்தத் குடும்பத்தின் அரசியல் அடையாளத்தைப் பற்றி யோசிக்க வில்லை. அநீதிக்கு எதிரான எங்கள் போராட்டம் ஒருபோதும் ஓயாது!&rdquo; துயரத்தி லும் அரசியல் ஆதாயம் தேடும் பாஜகவின் இந்த &lsquo;நாரதர்&rsquo; வேலையை வங்காள மக்கள் நிச்சயம் முறியடிப்பார்கள். - வி.கே. பாண்டியன்</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.