தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்
28 Jun 2026, 11:29 pm
<p><strong>தமிழகம் முழுவதும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்</strong></p><p>அரிலூர், ஜுன் 28- தீவிர போலியோ சொட்டு மருந்து முகாம் இந்தியாவில் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. 2004 ஆம் வருடம் முதல் தமிழகத்தில் போலியோவினால் எந்தக் குழந்தைக்கும் பாதிப்பு இல்லை. இந்த ஆண்டு போலியோ சொட்டு மருந்து முகாம், மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அரியலூர் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட முகாமில், ஜெயங்கொண்டம் எம்எல்ஏ வைத்திலிங்கம், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கினார். இதில், ஒருங்கிணைந்த பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட மருந்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் (பொறுப்பு) மதியழகன் மற்றும் மருத்து வர்கள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் திருவாரூர் மாவட்டம், திரு வாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட புலிவலம் அரசு உயர்நி லைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறையின் சார்பில் ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியா சொட்டு மருந்து முகாமினை உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் பி. வெங்கட்ரமணன் துவக்கி வைத்தார். நாகப்பட்டினம் நாடாளு மன்ற உறுப்பினர் வை. செல்வராஜ், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காமராஜ் ஆகியோர் உடனிருந்தனர். நிகழ்வில், துணை இயக்குநர் (சுகாதாரம்) மரு.சங்கீதா, வட்டார மருத்துவ அலுவலர் மரு.குருதேவ், சுகாதார அலுவலர் மரு.கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பாபநாசம் தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை அருகே, கோவிந்த நாட்டுச்சேரி ஊராட்சி பட்டுக்குடி, புத்தூர் குடிகாடு, நாயக்கர் பேட்டை அங்கன்வாடி மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. முன்னாள் ஊராட்சித் ஜெய்சங்கர் முகாமை தொடங்கி வைத்தார். இதில் வீரமாங்குடி ஆரம்ப சுகாதார நிலைய கிராம சுகாதார செவிலியர் டேரிஷ் மேரி, சரண்யா, அங்கன்வாடி பணியாளர்கள், முன்னாள் ஊராட்சி துணைத் தலைவர் கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சுமார் 300-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. பாபநாசம் அருகே, பண்டார வாடை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையம், துணை சுகாதார நிலையம், பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. இதில் பண்டாரவாடை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தீபக், கிராம செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்றனர். புதுக்கோட்டை புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்ட சிறப்பு முகாமில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜா.முகமது பர்வேஸ் போலியோ சொட்டு மருந்து வழங்கி துவக்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் குழந்தைசாமி, மாநகராட்சி ஆணையர் காந்திராஜ், கோட்டாட்சியர் பிரகாஷ், இணை இயக்குனர் (பொது சுகாதாரம் சென்னை) சதீஷ் ராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கும்பகோணம் கும்பகோணம் மாநகராட்சி கார்னேசன் மருத்துவமனையில், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் ர.வினோத் தொடங்கி வைத்தார். கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) மருத்துவர் கலைவாணி, வருவாய் கோட்டாட்சியர் திருமலை, வட்டார மருத்துவ அலுவலர் பிரேமா மற்றும் பலர் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் பேராவூ ரணி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நடைபெற்றது. பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார், பேராவூரணி ஊராட்சி ஒன்றியம், வடகிழக்கு தொடக்கப்பள்ளி மற்றும் சேதுபாவாசத்திரம் வட்டாரம், பூக்கொல்லை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்களை நேரில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வுகளில் வட்டார மருத்துவ அலுவ லர்கள் ராமலிங்கம் (சேதுபாவாசத்திரம்), அருள் (பேராவூரணி) மற்றும் மருத்துவப் பணியா ளர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மயிலாடுதுறை கூறைநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமினை மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ஜமால் முகமது யூனூஸ், மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பூங்கொடி ஆகியோர் துவக்கி வைத்தனர். இடம் பெயர்ந்து வாழும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும் முகாம் நாளன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். சாலையோர தற்காலிக குடியிருப்புகள், செங்கல் கால்வாய் குடியிருப்புகள், கல் குவாரிகள், பேருந்து நிலையங்கள், திருவிழா கூட்டங்கள், ரயில் நிலையங்கள் போன்ற பகுதிகளில் இருக்கும் குழந்தைகளுக்கும் விடுபடாமல் சொட்டு மருந்து வழங்க நடமாடும் குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. திருத்துறைப்பூண்டி திருத்துறைப்பூண்டி அருகே விளக்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் உட்பட 21 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டது. போலியோ முகாமில் சுமார் 1035 குழந்தைகள் பயனடைந்தனர். நிகழ்வில், விளக்குடி அரசு ஆரம்பசுகாதார நிலைய மருத்துவர் ரோகினி தலைமையில், பகுதி சுகாதார செவிலியர் புனிதா மற்றும் தன்னார்வலர்கள் உதவி செய்தனர்.</p>
