மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலரின் கணவர் கைது
3 Feb 2026, 4:00 pm

மாணவிக்கு பாலியல்தொல்லை: காவலரின் கணவர் கைது

சென்னை, பிப். 3- சென்னை பாண்டி பஜாரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் காவலரின் கணவர் கைது செய்யப்பட்டார். பாண்டி பஜார் ராஜூ பிள்ளைத் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் க.பூபாலன் (33). இவர், தி.நகரில் உள்ள ஒரு பிரபல மான நகைக் கடையில் ஊழி யராக வேலை செய்கிறார். பூபாலனின் மனைவி சென்னை காவல்துறையில் காவலராக பணிபுரிகிறார். பூபாலன், கடந்த 28ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவி சாலையில் நடந்து செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. மேலும் அதே மாணவிக்கு பூபாலன், கடந்த 30ஆம் தேதி சைகை மூலம் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர், தேனாம்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரின் அடிப்படையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, பூபாலனை திங்கட்கிழமை கைது செய்தனர். விசார ணைக்கு பின்னர் அவர்நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

தட்டச்சு பயிலகங்களை முடக்கும் அரசாணை 187-ஐ ரத்து செய்ய சிபிஎம் கோரிக்கை

திருப்பத்தூர், பிப். 3- தமிழகத்தில் கடந்த 80 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 4,000 தட்டெழுத்துப் பயிலகங்கள் கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்களின் அரசுப் பணி கனவை நனவாக்கி வருகின்றன. ஆண்டுக்கு 2 லட்சம் மாணவர்கள் இதன் மூலம் பயனடைவதோடு, அரசுக்கும் கணிசமான வருவாய் கிடைக்கிறது. இந்நிலையில், தட்டச்சு இயந்தி ரம் சார்ந்த தொழிலையே நம்பியுள்ள பல்லா யிரக்கணக்கான ஆசிரியர்கள், மெக்கானிக்குகள் மற்றும் அவர்களின் குடும்பங்களைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ள தமிழக அரசின் அர சாணை 187-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஆம்பூர் தாலுகா செய லாளர் ஆர்.மணிமாறன் வலியுறுத்தி யுள்ளார். பல லட்சம் கடன் பெற்று இத்தொழிலை நடத்தி வரும் உரிமை யாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்க, இப்பயிலகங்கள் தொடர்ந்து இயங்க அரசு அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.