தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கூலிபாளையம் நால் ரோடு போக்குவரத்து நெருக்கடி காவல் துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

9 Jan 2026, 3:41 pm
கூலிபாளையம் நால் ரோடு போக்குவரத்து நெருக்கடி காவல் துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
<p><strong>கூலிபாளையம் நால் ரோடு போக்குவரத்து நெருக்கடி காவல் துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்</strong></p> <p>திருப்பூர், ஜன.9- திருப்பூர் - ஈரோடு செல்லும் முக்கி யமான சாலையில் கூலிபாளையம் நால் &nbsp;ரோட்டில் ஏற்பட்டுள்ள கடும் போக்கு வரத்து நெருக்கடியை போக்க உரிய &nbsp;ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று &nbsp;தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் &nbsp;மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் வலி யுறுத்தி உள்ளார். இது குறித்து ஆர்.குமார் கூறியதா வது: திருப்பூர் - விஜயமங்கலம் சாலை &nbsp;விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வரும் &nbsp;நிலையில், கூலிபாளையம் நால்ரோட் டில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. காசிபா ளையத்தில் இருந்து இந்த நால்ரோட் டில் இடதுபுறம் திருப்பத்தில் மழைநீர் &nbsp;வடிகால் கட்டும் பணியும் நடைபெறுவ தால் ஒரு பகுதி போக்குவரத்து முழு மையாக தடைப்பட்டுள்ளது. அங்குள்ள &nbsp;போக்குவரத்து சிக்னல் அமைப்பும் செயல்படவில்லை. எனவே போக்குவ ரத்து பல மணி நேரம் பாதிக்கப்படுகிறது. &nbsp;இதனால் இந்த பாதையில் செல்லும் மக்கள் அவதிக்குள்ளாகும் நிலை &nbsp;உருவாகியது. ஆம்புலன்ஸ் கூட செல்ல &nbsp;முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. &nbsp;மாற்றுப் பாதையும் இல்லை. நெடுஞ்சாலை பணி நடைபெறும் போது &nbsp;போக்குவரத்தை சீரமைப்பதற்கு உரிய ஏற்பாடு இல்லை. ஒரு காவலரை &nbsp;நியமித்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்தவும், சிக்னலை இயக்குவதற்கு ஊத்துக்குளி காவல் துறை ஏற்பாடு செய்யவில்லை. எனவே, ஊத்துக்குளி காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு தினந்தோ றும் காலை 7 மணி முதல் 10 மணி வரை யும், மாலை 5 மணி முதல் 9 மணி வரை யும் இதற்கென்று ஒரு காவலரை தனி யாக நியமித்து போக்குவரத்தை ஒழுங் குபடுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அதோடு 24 மணி நேரமும் போக்குவரத்து சிக்னல் அமைப்பை செயல்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் நெடுஞ் சாலைத் துறையும் சாலை மேம்படுத் தும் பணி நடைபெற்று வருவதால் ஆங் காங்கே முறையான அறிவிப்பு பல கைகளை வைக்க வேண்டும். போக்கு வரத்து மாற்றம் இருக்கும் பகுதியில் &nbsp;அறிவிப்புப் பலகைகள் வைக்க வேண் டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்டச் செயலாளர் ஆர்.குமார் கேட்டுக் கொண்டிருக்கிறார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.