புதர்மண்டி காணப்படும் காவலர் குடியிருப்பு
17 Nov 2025, 4:40 pm
<p><strong>புதர்மண்டி காணப்படும் காவலர் குடியிருப்பு</strong></p>
<p>தருமபுரி, நவ.17- மொரப்பூர் காவலர் குடியிருப்பு பகுதியில் மண்டி யுள்ள புதர்களை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தருமபுரி மாவட்டம், மொரப்பூர் மற்றும் கம்பைநல் லூர் காவல் நிலையங்களில் பணிபுரியும் 50க்கும் மேற் பட்ட காவலர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள், மொரப் பூர் காவல் ஆய்வாளர், உள்ளிட்ட அனைத்து முக்கிய காவல் அதிகாரிகளும் மொரப்பூர் காவலர் குடியிருப் பில் குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். குடியி ருப்பு பகுதியானது மொரப்பூர் காவல் நிலையத்தில் பின்புறம் அமைந்துள்ளது. காவலர்கள் குடியிருக்கும் புதிய கட்டிடங்கள் மற்றும் பழைய கட்டிடங்கள் அருகே செடி, கொடி, மரங்கள் சூழ்ந்துள்ளதால் இங்கு உயிரை கொள்ளும் கொடிய விஷம் கொண்ட நாகப்பாம்பு, கட்டுவிரியன் அதிகம் நடமாடுவதால் பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் அச்சத்தில் வசித்து வருகின்ற னர். எனவே, காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண் டும். குடியிருப்பைச் சுற்றி மண்டியுள்ள புதர்களை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
