திருச்சி விரைவு செய்திகள்
4 Mar 2026, 5:01 pm

மார்த்தாண்டத்தில் கார் மோதி மூன்று பைக்குள் சேதம்

குழித்துறை , மார்ச் 5- மார்த்தாண்டத்தில் கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் மோதி மூன்று பைக்குள் சேதமடைந்தன. குமரி மாவட்டம், மார்த்தாண்டம் மார்க்கெட் அருகே புதனன்று பிற்பகல் சொகுசு கார் நின்று கொண்டிருந்தது .வாலிபர் ஒருவர் காரை எடுத்த போது கட்டுப்பாட்டை இழந்து, அருகில் உள்ள மூன்று பைக்குள் மீதும் பழக்கடை மீதும் மோதி சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடினர். பழக்கடையில் யாரும் இல்லாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது .இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ராகுல் காந்தி உருவ பொம்மையை கட்டி தொங்கவிட்டு அவமரியாதை போலீசார் வழக்கு பதிவு

குழித்துறை , மார்ச் 5- மார்த்தாண்டம் மேம்பாலத்தில் ராகுல் காந்தி உருவ பொம்மையை கட்டி தொங்கவிட்டு அவமரியாதை செய்த சம்பவத்தில் காவல்துறையினர் வழக்கு பதிவுசெய்தனர். குமரி மாவட்டம், மார்த்தாண்டம் மேம்பாலத்தில் காந்தி மைதானம் பகுதியில் சம்பவத்தன்று நள்ளிரவு யாரோ காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யின் உருவ பொம்மை கட்டி தொங்கவிட்டு அவமரியாதை செய்துள்ளனர். இதற்கு காங்கிரஸ் கட்சியினர் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனைத் தொடர்ந்து மார்த்தாண்டம் காவல் சார்பு ஆய்வாளர் வைகுண்டதாஸ் கொடுத்த தகவலின் பெயரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பராமரிப்பு பணியால் குருவாயூர் எக்ஸ்பிரஸ் மாற்றுப்பாதையில் இயக்கம்

திருநெல்வேலி, மார்ச் 4- மதுரை கோட்டத்தில் நடக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக குருவாயூர் மற்றும் ஹவுரா எக்ஸ்பிரஸ்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளது. மதுரை கோட்டத்தில் நடக்கும் பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டு வருகின்றன. நெல்லையை பொறுத்த வரை செங்கோட்டை - ஈரோடு உள்ளிட்ட சில ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் தொடர்ச் சியாக குருவாயூர் எக்ஸ்பிரசும் மாற்றுப்பாதையில் இயக்கப்பட உள்ளது.அதன்படி குருவாயூரில் இருந்து சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் மார்ச் 5, 6, 7, 8, 11, 12, 13, 14, 15, 18, 19, 20, 21, 22, 25, 26, 27, 28, 29 ஆகிய தேதிகளில் நெல்லை, மதுரை வழியாக மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக எழும்பூர் செல்கிறது. இந்த ரயில் சோழவந்தான், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல்,மணப்பாறை செல்லாது. இதற்காக கூடுதல் நிறுத்தமாக சிவகங்கை, புதுக்கோட்டை வழங்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து வருகிற 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் புறப்பட்டு, ஹவுரா செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (வண்டி எண். 12666), மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப்பாதை வழியாக ஹவுரா செல்லும். கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் செல்லாது. கூடுதல் நிறுத்தமாக சிவகங்கை, புதுக்கோட்டை வழங்கப்பட்டுள்ளது கன்னியாகுமரியில் இருந்து 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் புறப்பட்டு, ஐதராபாத் செல்லும். சிறப்பு ரயில் (07229), மதுரை, மானாமதுரை, காரைக்குடி, திருச்சி ஆகிய மாற்றுப் பாதை வழியாக ஐதராபாத் செல்லும், கொடைக்கானல் சாலை, திண்டுக்கல் செல்லாது. கூடுதல் நிறுத்தமாக அருப்புக்கோட்டை, சிவகங்கை, புதுக்கோட்டை வழங் கப்பட்டுள்ளது. இத்தகவலை தெற்கு ரயில்வே தெரி வித்துள்ளது.

ஜாமீனில் வந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

இராஜபாளையம், மார்ச் 4- இராஜபாளையம் துரைசாமியாபுரம் பகுதியில் வசித்து வரும் அய்யம்மாள் (54), தனியார் நூற்பாலையில் பணியாற்றி வருகிறார். தாய்–தந்தையை இழந்த தனது மகன் வழி பேரன் மாதேஷ் (17) என்பவரை தன்னு டன் வைத்து வளர்த்து வந்தார். மாதேஷ் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாததால், தனியார் டியூஷன் மையத்தில் பயிற்சி பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நண்பருடன் சேர்ந்து இரு சக்கர வாகன திருட்டில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட அவர், பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.ஜாமீனில் வந்ததைத் தொடர்ந்து, அய்யம்மாள் அவரை கண்டித்து அறிவுரை கூறி வேலைக்குச் சென்றுள் ளார். மாலை வீட்டிற்கு திரும்பி வந்தபோது, மாதேஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் இருந்ததாக தெரி விக்கப்படுகிறது. இதுகுறித்துதகவல் கிடைத்ததைத் தொடர்ந்து தெற்கு காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து, விசா ரணை நடத்தி வருகின்றனர்.

சேரன்மகாதேவி பகுதியில் வாழைக்காய் விலை கடும் வீழ்ச்சி விவசாயிகள் கவலை

திருநெல்வேலி மார்ச் 4- நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி சுற்றுவட்டாரப் பகுதிகளான பத்தமடை, மேலச்செவல், கோபா லசமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி, வீரவநல்லூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. ஒரு வாழை பயிரிட கன்று பதிக்க, உரம், பராமரிப்புச் செலவு என ரூ.100 வரை செலவு செய்யப்படுகிறது. ஒரு ஏக்கருக்கு 1,200 வாழைகள் வீதம் ரூ.1.20 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. தற்போது காய் வெட்டும் சீசன் நடந்து வரும் நிலையில் ஆரம்பத்தில் கிலோ 30 ரூபாய்க்கு வெட்டி வந்த நிலையில் தற்போது ரூ.9 வரை விலை கடுமையாக சரிந்துள்ளது. இதனால் விவசாயி களுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை நஷ் டம் ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு இதே பருவத்தில் கிலோ 55 ரூபாய்க்கு காய்கள் வெட்டப்பட்ட நிலையில் தற்போது விலை ரூ.9 என சரிந்துள்ளதால் விவசாயிகள் அடகு வைத்த நகைகளை திருப்ப முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இனிவரும் காலங்களில் வாழைக் காய்க்கு உரிய விலை கிடைக்க வாழை கொள்முதல் நிலை யத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அரசு வேலை-நிவாரணம் வழங்கிடுக! ராபர்ட் புரூஸ் எம்.பி. வலியுறுத்தல்

திருநெல்வேலி, மார்ச் 4- நெல்லை நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புருஸ் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது:- பெரும்பத்தில் நிகழ்ந் துள்ள கொலைச் சம்பவம் வன்மையாக கண்டிக்கத் தக்கது. தமிழக அரசு குற்றம் புரிந்தவர்களை கண்டுபிடித்து தண்டனை பெற்றுக் கொடுப்பதுடன் இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு நிவார ணமும் இறந்து போன ஜான் குடும்பத்திற்கு நஷ்ட ஈடும் வழங்குவதுடன், அரசு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் வலி யுறுத்தியுள்ளார்.