தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காஞ்சிபுரம் தொழிலாளர் போராட்டங்களில் காவல்துறையின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை

8 Apr 2026, 5:30 am
காஞ்சிபுரம் தொழிலாளர் போராட்டங்களில் காவல்துறையின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை

காஞ்சிபுரம் தொழிலாளர் போராட்டங்களில் காவல்துறையின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமையைக் கோரும் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் மீது காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக வழக்குகளைப் பதிவு செய்து, கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் திரும்பப் பெற வேண்டும் என சிஐடியு மாநிலக் குழுவின் சார்பில் டிஜிபி-யிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பன்னாட்டு மற்றும் உள்நாட்டுத் தொழிற்சாலைகளில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

இத்தகு தொழிற்சாலைகளில் சங்கம் அமைக்கும் உரிமையை வலியுறுத்தி, ஐயப்பந்தாங்கல் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத் தொழிலாளர்கள் கடந்த சில நாட்களாகப் போராடி வருகின்றனர். இந்நிலையில், கடந்த மார்ச் 27 அன்று ஒரு நிறுவனத்தின் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, 20-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.