தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பொதுப்பாதை ஆக்கிரமித்த காவல் ஆய்வாளர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

25 Feb 2026, 3:22 pm
பொதுப்பாதை ஆக்கிரமித்த காவல் ஆய்வாளர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

பொதுப்பாதை ஆக்கிரமித்த காவல் ஆய்வாளர் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சேலம், பிப்.25– தும்பிப்பாடி ஊராட்சியில் பொதுப்பாதையை ஆக்கிரமித் துள்ள காவல் ஆய்வாளர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, காடையாம்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், தும்பிப்பாடி ஊராட்சி, மூக்கனூர் கிராமப் பகுதி யில் காவல் ஆய்வாளர் சரோஜா தனது அதிகாரத்தைப் பயன்ப டுத்தி, பொதுப்பாதையை ஆக்கிர மித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆய் வாளர் சரோஜா, அவரது கணவர் மற்றும் தம்பிகளான ஜெய்குமார், சிவக்குமார் ஆகியோர் பெயரில் செய்யப்பட்டுள்ள போலி தான செட் டில்மென்ட், கிரயம் மற்றும் போலி பட்டாக்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.  சர்வே எண்  197/5D-ல் உள்ள மாமூல் பொதுப்பா தையில் கான்கிரீட் அல்லது தார் சாலை அமைத்துத் தர வேண்டும். மூக்கனூர் சர்வே எண் 111/3K-ல் உள்ள 12 சென்ட் நிலத்திற்கான போலி கிரயம் மற்றும் பட்டாவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. விவசாயிகள் சங்க வட்டத் தலைவர் என். ஈஸ்வரன் தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட் டத்தில், மாவட்ட துணைத் தலைவர் பி. தங்கவேலு, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்டச்  செயலாளர் பி. அரியாக்கவுண் டர், சிபிஎம் மேச்சேரி ஒன்றியச் செய லாளர் ஜி. மணிமுத்து ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த இயக்கத்தில், சங்க வட்ட துணைச்  செயலாளர் எம். மோகன், வட்ட துணைத்தலைவர் என். பொன்னு சாமி, துணைச்செயலாளர் பி. முரு கன், ஏ. மகேஸ்வரி (சிக்கம்பட்டி), வரதன், ரவி (பூசாரிப்பட்டி) உள் ளிட்ட ஏராளமான விவசாயிகள் பங் கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.