தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வாகனங்களை கவன குறைவாக ஓட்டிய ஓட்டுநர்கள் மீது காவல்துறை வழக்கு

28 Nov 2025, 2:28 pm
வாகனங்களை கவன குறைவாக ஓட்டிய  ஓட்டுநர்கள் மீது காவல்துறை வழக்கு
<p><strong>வாகனங்களை கவன குறைவாக ஓட்டிய &nbsp;ஓட்டுநர்கள் மீது காவல்துறை வழக்கு</strong></p> <p>சிவகங்கை, நவ.28- கடந்த 27/10/25 அன்று நடைபெற்ற மாமன்னர் மருது பாண்டியர் நினைவு தினம் மற்று &nbsp;30/10/25 அன்று நடை பெற்ற தேவர் குரு பூஜையையும் முன்னி ட்டு, காளையார்கோவில், சிவகங்கைநகர் &amp; தாலுகா, மானாமதுரை, திருப்புவனம், திருப்பத்தூர் நகர், &nbsp;கீழச்சிவல்பட்டி, திருக்கோஸ்டி காவல் நிலைய எல்லைக் குட்பட்ட இடங்களில், வாகனங்களை மிகக் கவனக்குறைவாக அசட்டையாகவும் ஓட்டி, பொதுமக்களுக்கும் &nbsp;தொந்தரவு ஏற்படுத்தியதுடன், பயணத்தின் போது ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த வாகன ஓட்டிகளுக்கு எதிராக மொத்தம் 68 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. &nbsp;மேற்படி வழக்குகள் 285, 292, 281, 125 பி என் எஸ் &nbsp;சட்டம் ஆகிய சட்டப் பிரிவுகளின் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறிய வாகனங்க ளில் சம்பந்தப்பட்ட காவல் நிலைய காவல் துறையினரால் இதுவரை 46 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.குற்றவாளி கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். &nbsp;பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நீதிமன்றத்தின் வாயிலாக உரிமையாளர்களுக்கு ஒப்படைக்கப்படும். பொதுச்சாலைகளில் இவ்வாறு அசட்டையாகவும் கவனக்குறைவாகவும் வாகனம் ஓட்டவும் தங்களுக்கும் பிறரது உயிருக்கும் ஆபத்து ஏற்படுத்தும் செயல்களைத் தடுக்கும் &nbsp;வகையில், சம் பந்தப்பட்ட நபர்களின் ஓட்டுநர் உரிமத்தை &nbsp;ரத்து/இடைநிறுத்துதல் தொடர்பான மேல்நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. வெள்ளியன்று, பாதுகாப்பான முறை யில் வாகனம் ஓட்டுவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் &ldquo;DRIVE &nbsp;SAFE&rdquo; எனும் வடிவத்தில் அடுக்கி வைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்கு ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.