தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காட்டுமன்னார்கோவில் அருகே பெண் ஊரை விட்டு ஒதுக்கிவைப்பு காலில் விழ வைத்ததாகப் காவல்துறையில் புகார்

9 Feb 2026, 3:02 pm
காட்டுமன்னார்கோவில் அருகே  பெண் ஊரை விட்டு ஒதுக்கிவைப்பு காலில் விழ வைத்ததாகப் காவல்துறையில் புகார்
<p><strong>காட்டுமன்னார்கோவில் அருகே &nbsp;பெண் ஊரை விட்டு ஒதுக்கிவைப்பு காலில் விழ வைத்ததாகப் காவல்துறையில் புகார்</strong></p> <p>சிதம்பரம், பிப்.9- &nbsp; பெண் ஒருவரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து, மீண்டும் ஊருக்குள் வந்ததற்காகக் காலில் விழ வைத்து அவமானப்படுத்தியதாகக் காட்டுமன்னார்கோவில் காவல் நிலை யத்தில் அளிக்கப்பட்ட புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காட்டுமன்னார்கோவில் அருகே கொண்டாயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சியம்மாள் (56) என்பவர் அளித்த புகாரில் கூறி யிருப்பதாவது: அவரது கணவர் ரவி கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு காலமான நிலையில், இரு மகன்க ளுடன் வாழ்ந்து வருகிறார். மகன்க ளுக்குத் திருமணமாகிக் குழந்தை களுடன் தனித்தனியாக வசித்து வரு கின்றனர். இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன்பு அந்த கிராமத்தில் உள்ள சில முக்கிய பிரமுகர்கள் ஒன்று கூடிப் பொதுப்பணித்துறைக்குச் சொந்த மான ராஜன் வாய்க்காலில் கோவில் கட்ட ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரது மகன்கள், வெள்ளக்காலங்களில் கோவில் அடித்துச் செல்லும் அபாயம் இருப்பதாகவும், பட்டா அல்லது நத்தம் புறம்போக்கு பகுதிகளில் கோவில் கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த ஊர் முக்கிய பிரமுகர்களுக்கும் இவரது மகன்களுக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அதே ஊரைச் சேர்ந்த உலக நாதன், வீரமணி, சுந்தரம், சுரேஷ், செந்தில், தங்கராசு, கண்ணன், ராஜேந்திரன், ரமேஷ், கலிய பெருமாள் உள்ளிட்டோர், அவர்களது குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாக அறிவித்ததுடன், யாரும் தொடர்பு வைத்துக்கொள்ளக் கூடாது என்றும் கூறியுள்ளனர். மேலும், அவர்கள் பயன்படுத்தி வந்த குடிநீர்க் குழாயை உடைத்துச் சேதப்படுத்தியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு ஊரைச் சேர்ந்த ராஜங்கம் என்ப வர் காலமானபோது, அவரது துக்க நிகழ்வில் கலந்து கொண்டதற்காக, &ldquo;ஊர்க் கட்டுப்பாட்டை மீறி எப்படி வந்தீர்கள்?&rdquo; எனக் கேட்டு, ராஜங்கத்தின் மருமகள்கள் சுஜாதா, சுமதி ஆகியோரின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டால் மட்டுமே பிணத்தை அடக்கம் செய்வோம் எனக் கட்டாயப்படுத்தியதாகத் தெரி வித்துள்ளார். இதனால் அவமானம் தாங்க முடியாமல் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டதாகக் கூறியுள்ளார். அதன் பின்னரும், ஊர் கோவிலுக்குச் சென்றால் &nbsp;தகாத &nbsp;வார்த்தைகளால் திட்டி மிரட்டு வதாகவும், வட்டாட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பொது இடங்களுக்குச் செல்லும்போது அவதூறாகப் பேசி மன உளைச்சல் ஏற்படுத்துவதாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், அவரது பேரன்கள் படிக்கும் பள்ளி யிலும் மற்ற குழந்தைகளிடம் பேசக்கூடாது எனக் கூறி, சமூக ஒதுக்கல் செய்யப்படுவதாகவும் தெரி வித்துள்ளார். இதனால் தங்களது குடும்பம் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி யுள்ளதாகக் கூறி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து காவல் உதவி ஆய்வாளர் பைசலிடம் கேட்டபோது, &ldquo;இது ஊர் தொடர்பான பிரச்சனை என்பதால் வட்டாட்சியரிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவர்களால் விசாரணை நடைபெற்று வருகிறது&rdquo; என்று தெரிவித்தார்.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.