திமுக வேட்பாளர் குறித்து அவதூறு: போலீசார் வழக்குப்பதிவு
11 Apr 2026, 5:30 am

திமுக வேட்பாளர் குறித்து அவதூறு: போலீசார் வழக்குப்பதிவு

பெருந்துறை திமுக வேட்பாளர் குறித்து அவதூறு பரப்பியது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இவரது பெயரை பயன்படுத்தி தவறாக வாட்ஸ் அப்பில் அவதூறு பரப்பப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து திமுக பெருந்துறை மேற்கு ஒன்றிய செயலாளர் பிரகாஷ், பெருந்துறை காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.