தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஆபத்தாக மாறிய போலீஸ் தடுப்புகள் முகப்பேர் - திருமங்கலம் சாலையில் வாகன ஓட்டிகள் அவதி

17 Feb 2026, 3:36 pm
ஆபத்தாக மாறிய போலீஸ் தடுப்புகள் முகப்பேர் - திருமங்கலம் சாலையில் வாகன ஓட்டிகள் அவதி
<p><strong>ஆபத்தாக மாறிய போலீஸ் தடுப்புகள் முகப்பேர் - திருமங்கலம் சாலையில் வாகன ஓட்டிகள் அவதி</strong></p> <p>அம்பத்தூர், பிப்.17- அம்பத்தூர் முகப்பேர் - திருமங்கலம் இடையிலான பிரதான சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயணிக்கும் நிலையில், வாவின் கோல்டன் பிளாட் முதல் கலெக்டர் நகர் வரை செல்லும் வழியில், ஜெ.ஜெ. நகர் மின்வாரிய அலுவலகம் எதிரே வைக்கப்பட்டுள்ள போலீஸ் பேரிகார்டுகள் பெரும் விபத்து அபாயத்தை ஏற்படுத்தி வருகின்றன. &nbsp;வாகனங்களின் வேகத்தைக் குறைக்க வைக்கப்பட்ட இந்தத் தடுப்புகளைத் தவிர்க்க முற்படும்போது, வாகன ஓட்டிகள் திடீரெனத் திரும்புவதால் பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றன. தற்போது விபத்தில் சிக்கிச் சாலையிலேயே விழுந்து கிடக்கும் இந்தத் தடுப்புகள், மற்ற வாகன ஓட்டிகளுக்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன. மக்களின் பாதுகாப்பிற்காக வைக்கப்பட்ட பேரிகார்டுகளே காயங்களுக்கும் விபத்துகளுக்கும் காரணமாக அமைவது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பெரும் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் போக்குவரத்து காவல்துறை உரிய நடவடிக்கை எடுத்து, இந்தத் தடுப்புகளை முறைப்படுத்தவோ அல்லது தேவையற்ற இடங்களில் இருந்து அகற்றவோ முன்வர வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.