தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

நீட் தேர்வுக்கு எதிராக போராடிய  மாணவர்கள் மீது காவல்துறையினர்  அராஜக தாக்குதல்-கைது நடவடிக்கை!

21 Jun 2026, 10:39 pm
நீட் தேர்வுக்கு எதிராக போராடிய  மாணவர்கள் மீது காவல்துறையினர்  அராஜக தாக்குதல்-கைது நடவடிக்கை!
<p><strong>நீட் தேர்வுக்கு எதிராக போராடிய &#160;மாணவர்கள் மீது காவல்துறையினர் &#160;அராஜக தாக்குதல்-கைது நடவடிக்கை!</strong></p><p>சென்னை, ஜூன் 21 - நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாண வர்கள் மீது காவல்துறையினர் அராஜக தாக்குதல் நடத்தி, கைது செய்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்ட னம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செய லாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஒன்றிய பாஜக அரசின் நீட் தேர்வு முறைகேடுகளை கண்டித்தும், தமிழகத் தில் தொடரும் நீட் தேர்வு தற்கொலை களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகை யில் நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் சனிக்கிழமை (ஜூன் 20) போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாணவர்களை ஒன்றுசேர விடாமல் ஆங்காங்கே கைது செய்தும், காட்டு மிராண்டித்தனமாக தாக்கியும் தமிழக காவல்துறையினர் அத்துமீறிய நடவடிக் கைகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த ஜன நாயக விரோத நடவடிக்கையை மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக் கிறது. அடையாளத்தை மறைத்த போலீசார் காவல்துறையினர் நடத்திய இந்த கொடூரத் தாக்குதலில் ஒரு மாணவரின் தோள்பட்டை இறங்கியுள்ளது. அதைவிட அநாகரீகமாக மாணவிகளை ஆண் காவ லர்கள் தகாத முறையில் ஆடையைப் பிடித்து இழுத்தும், தள்ளியும், அடித்தும் கைது செய்துள்ளனர். மேலும் சட்டத் திற்கு புறம்பாக காவலர்கள் தங்களது சீருடையில் பெயர் வில்லைகளை அணி யாமல் தங்களின் அடையாளத்தை மறைத்துக் கொண்டு அராஜகத்தில் ஈடு பட்டுள்ளனர். ஜனநாயக உரிமைகளை காலில் போட்டு மிதிக்கும் வகையில் காவல் துறையினரின் இந்த நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இந்திய சட்டங்களின் படியும் (பி.என்.எஸ். தேசிய மனித உரிமை ஆணைய வழிகாட்டுதல் படியும்) இவை குற்றங்களாகும். மேலும், அரச மைப்பு சட்ட உரிமைகள் மற்றும் கண்ணி யத்துக்கு எதிரானதாகும். எனவே, நியாயமான கோரிக்கை களுக்காக போராடிய மாணவர்கள் மீது வன்முறையை ஏவி தாக்குதல் நடவடிக் கைகளில் ஈடுபட்ட காவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, மாணவி யர்களை தகாத முறையில் நடத்திய ஆண் காவலர்கள் மீது உடனடியாக வழக்குப் பதிந்து சட்ட ரீதியான நடவடிக் கைகளை மேற்கொள்ள வேண்டுமென வும், ஜனநாயக ரீதியிலான போராட்டங் களுக்கு உரிய முறையில் அனுமதி வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்து கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.