தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காஞ்சிபுரம் தொழிலாளர் போராட்டங்களில் காவல்துறையின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை

7 Apr 2026, 5:38 pm
காஞ்சிபுரம் தொழிலாளர் போராட்டங்களில்  காவல்துறையின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை
<p><strong>காஞ்சிபுரம் தொழிலாளர் போராட்டங்களில் &nbsp;காவல்துறையின் ஒருதலைப்பட்சமான அணுகுமுறை</strong></p> <p>டிஜிபி-யிடம் சிஐடியு புகார் சென்னை, ஏப். 7- காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொழிற்சங்கம் அமைக்கும் உரிமைக்காகப் போராடும் தொழி லாளர்கள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் &nbsp;மீது காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக வழக்குகளைப் பதிவு செய்து, கைது நடவடிக்கை களை மேற்கொள்வதாகத் சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் எஸ். கண்ணன் தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநருக்கு கடிதம் &nbsp;எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பன்னாட்டு மற்றும் உள்நாட்டுத் தொழிற் சாலைகளில் லட்சக்கணக்கான தொழிலா ளர்கள் பணிபுரிகின்றனர். இந்தியத் தொழிற் சங்கச் சட்டம், 1926-இன் கீழ் சங்கங்களைப் பதிவு செய்து, ஊதிய உடன்பாடுகள் மூலம் உரி மைகளைப் பெறுவது தொழிலாளர்களின் சட்டப் படியான உரிமையாகும். ஆனால், சில நிறுவனங்கள் இச்சங்கங் களை ஏற்க மறுப்பதுடன், முன்னணி நிர்வாகி களைப் பணிநீக்கம் செய்தல், பணியிட மாற்றம் &nbsp;மற்றும் ஊதியப் பிடித்தம் போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றன. இது &lsquo;தொழிற் தகராறு சட்டம் 1947&rsquo;-இன் படி (The Industrial Disputes Act, 1947), மிக மோசமான &lsquo;தொழி லாளர் விரோத நடவடிக்கை&rsquo; (Unfair Labour Practice) ஆகும். அரசியல் சாசன உரிமை பறிப்பு இத்தகைய அநீதிகளுக்கு எதிராக இந்திய &nbsp;அரசியல் சாசனத்தின் பிரிவு 19-இன் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளான, பேச்சுரிமை (19(1)(a) - Freedom of speech); அமைதியான முறையில் கூடுதல் (19(1)(b) - Peaceful assembly); சங்கம் அமைத்தல் (19(1)(c) - &nbsp;Association) - ஆகியவற்றின் அடிப்படையில் தொழிலாளர்கள் ஜனநாயக முறையில் போராடி &nbsp;வருகின்றனர். ஆனால், காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை நிர்வாகங்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, போராட்டக் களத்தில் இருக்கும் தொழிலாளர்களைக் குற்றவாளிகளைப் போல &nbsp;அணுகுவது கவலையளிக்கிறது. எஸ்.எச். எலக்ட்ரானிக்ஸ் போராட்டம் மற்றும் கைது நீர்வல்லூர் பகுதியில் உள்ள எஸ்.எச். எலக்ட்ரானிக்ஸ் தொழிற்சாலையில் சங்கம் அமைத்ததற்காகப் பணிநீக்கம் செய்யப்பட்ட 93 தொழிலாளர்கள் கடந்த இரண்டு ஆண்டு களாகப் போராடி வருகின்றனர். இது தொடர்பான &nbsp;பேச்சுவார்த்தைகள் மற்றும் வழக்குகள் நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், கடந்த மார்ச் 27 அன்று குடும்பத்துடன் போராடிய பெண்கள், குழந்தைகள் &nbsp;உள்ளிட்ட 80 பேரை காவல்துறை கைது செய்தது. &nbsp;இதில் சிஐடியு மாநிலத் துணைப் பொதுச்செய லாளர் இ. முத்துக்குமார் மற்றும் மாவட்ட நிர்வாகி &nbsp;கார்த்திக் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு &nbsp;செய்யப்பட்டு, நள்ளிரவு 2 மணியளவில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள னர். மேலும், இ. முத்துக்குமார் மீது நிலுவை யில் உள்ள பழைய வழக்குகளைக் காட்டி அவ ரைத் தொடர்ந்து சிறையிலேயே வைக்கக் காவல்துறை முயற்சித்து வருகிறது. டிஜிபி-யிடம் கோரிக்கை சட்டமன்றத் தேர்தல் நன்னடத்தை விதிகள் &nbsp;அமலில் உள்ள இக்காலத்தில், தேர்தல் பணி களில் கவனம் செலுத்த வேண்டிய காவல்துறை, &nbsp;தொழிற்சங்கத் தலைவர்களைச் &lsquo;சமூக விரோதி களைப் போல&rsquo; நடத்துவது நியாயமற்றது. எனவே, தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர் இவ்விவகாரத்தில் நேரடியாகத் தலையிட்டு, இ. முத்துக்குமார் உள்ளிட்டோர் மீதான அடக்குமுறைகளை முடிவுக்குக் கொண்டு &nbsp;வர வேண்டும் என்றும், தொழிற்சாலைப் பகுதி களில் அமைதியான சூழலை உருவாக்க வேண் டும் என்றும் சிஐடியு வலியுறுத்தியுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.