அடிப்படை வசதிகளுக்காகப் பொய்குணம் கிராம மக்கள் மறியல்
yesterday
<p><strong>அடிப்படை வசதிகளுக்காகப் பொய்குணம் கிராம மக்கள் மறியல்</strong></p><p> கள்ளக்குறிச்சி, ஜூன் 22- கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகிலுள்ள பொய்குணம் கிராமத்தில் நீண்டகாலமாக நிலவி வரும் அடிப்படை வசதி குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, கிராம மக்கள் புதனன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் தட்டுப்பாடு, பழுதடைந்த சாலைகள் மற்றும் போதிய தெருவிளக்கு வசதி இல்லாதது உள்ளிட்ட அவலங்களால் தங்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். தங்கள் நீண்டநாள் கோரிக்கைகளை அலட்சியம் செய்யும் உள்ளூர் நிர்வாகத்தைக் கண்டிக்கும் வகையில், சாலையின் நடுவே மரங்களை வெட்டிப் போட்டு பொது மக்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டு, வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த சங்கராபுரம் போலீசார், விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தூய்மையான குடிநீர் விநியோகம், சாலைச் சீரமைப்புப் பணிகள் மற்றும் தெருவிளக்கு வசதி ஆகிய வற்றை உறுதி செய்ய வேண்டும் என்பதில் கிராம மக்கள் உறுதியாக உள்ளனர். சம்பந்தப்பட்ட துறையினர் அல்லது பஞ்சாயத்து நிர்வாகம் தங்கள் கோரிக்கையை நிறைவேற்றும் வரை இந்த மறியல் போராட்டம் தொடரும் என அவர்கள் அறிவித்துள்ளனர். </p>
