தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

22 Nov 2025, 4:09 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

கவிஞர் தமிழன்பன் மறைவு: முதல்வர் இரங்கல்

சென்னை: மரபு மற்றும் புதுக்கவிதையில் சிறந்து விளங்கிய கவிஞர் ஈரோடு தமிழன்பன் (ந.செகதீசன்) மறை வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரி வித்துள்ளார்.  பாவேந்தர் பாரதிதாசனுடன் பத்தாண்டுகள் நெருங்கிப் பழகிய சிறப்புக்குரியவர் தமிழன்பன். தொலைக்காட்சி செய்தி  வாசிப்பாளர், பேராசிரியர், இயல் இசை நாடக மன்ற நிர்வாகி என பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி னார். கலைமாமணி, சாகித்ய அகாதெமி, பாரதிதாசன் விருது  உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர்.  திமுக ஆட்சி வந்ததும் 2022-இல் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் அவருக்கு வீடு வழங்கப்பட்டது. அவர் எழுதிய நூல்களை யும், அவரது வாழ்க்கை வரலாற்று ஆவணப்படமான “மகா கவி” யையும் முதலமைச்சராக வெளியிட்ட பேறு கிடைத் ததை நினைவுகூர்ந்தார் ஸ்டாலின். இறுதிக்காலம் வரை  தமிழுக்குத் தொண்டாற்றிய கவிஞரின் குடும்பத்தினருக்கும் தமிழன்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் தெரி வித்தார்.

சட்டமன்றத் தேர்தல்: காங்கிரஸ் பேச்சுவார்த்தை குழு அமைப்பு

சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த ஐந்து பேர் கொண்ட குழுவை அகில இந்திய  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்து உள்ளார். அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ்  சோடங்கர் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலை வர் கு.செல்வப்பெருந்தகை, அகில இந்திய காங்கிரஸ் செய லாளர்கள் சூரஜ் எம்.என்.ஹெக்டே மற்றும் நிவேதித் ஆல்வா, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செ.ராஜேஷ் குமார் ஆகியோர் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.  காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தனது எக்ஸ் வலைதளத்தில், “இந்த அறிவிப்பு இந்தியா கூட்டணியின் ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும், அவ்வப்போது வெளி யாகும் ஊகச் செய்திகளுக்கு இது முடிவு கட்டும்” என்றும் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வு:  முதல்வருடன் அமைச்சர் ஆலோசனை

சென்னை: பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆலோசனை மேற்கொண்டார். 2011 ஆம் ஆண்டுக்கு முன்பு அரசு மற்றும் அரசு நிதி யுதவி பெறும் பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர் களும் தகுதித் தேர்வு எழுத வேண்டும் என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்ட நிலையில், இந்த தீர்ப்பு தொடர்பாக பேரா சிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் வெள்ளியன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பல்வேறு ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்தனர். அமைச்சர் அன்பில் மகேஸ், வரும் டிசம்பர் மாதத்தில் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் சென்று  ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்திக்க  உள்ளதாகத் தெரிவித்தார். தகுதித்தேர்வில் இருந்து பணி யில் உள்ள ஆசிரியர்களுக்கு விலக்கு பெற்றுத் தர வேண்டும் என்றும், சிறப்புதேர்வு நடத்தினால் மதிப்பெண் சலுகை வழங்க வேண்டும் என்றும் ஆசிரியர் சங்கப் பிரதி நிதிகள் வலியுறுத்தினர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில், “திமுக அரசு எந்த  சூழ்நிலையிலும் ஆசிரியர்களைக் கைவிடாது என முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். ஆசிரியர்க ளின் நலன் காத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும்  அவர் உறுதியளித்துள்ளார். பெரம்பூரில் 4 ஆவது ரயில் முனையம்  சென்னை: சென்னையில் பெரம்பூரில் நான்காவது ரயில் முனையத்தை அமைப்பதற்கான விரிவான திட்ட  அறிக்கையை தெற்கு ரயில்வே, ரயில்வே வாரியத்தின் ஒப்பு தலுக்காக சமர்ப்பித்துள்ளது. ரூ.342 கோடி மதிப்பீட்டில் மொத்தம் 7 நடைமேடைகளுடன் இந்த ரயில் முனையம் அமையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலுக்கான பணம்  10 நாளில் வரவு

வைப்பு சென்னை: விவ சாயிகளிடம் கொள் முதல் செய்யப்படும் பாலுக் கான தொகை 10 நாள் களில் வரவு வைக்கப்படு வதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரி வித்துள்ளார். ஆவின் நிறுவனத்துக்கு தேவை யான பொருட்கள் ஆன்- லைன் மூலம் கொள் முதல் செய்யப்படு கின்றன. பாலின் தரத் துக்கு ஏற்ப விவசாயி களுக்கு தொகை வழங்கப்படுகிறது. தனி யார் நிறுவனங்கள் ஒவ் வொரு நாளும் வெவ் வேறு விலையில் பால் கொள்முதல் செய்யும் நிலையில், ஆவின் மட்டுமே நிலையான விலையில் பால் கொள் முதல் செய்வதாக அவர் தெரிவித்தார்.

வால்வோ பேருந்து சேவை அடுத்த மாதம் தொடக்கம்

சென்னை: அடுத்த மாதம் வால்வோ பேருந்து சேவையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைப்பதாக போக்கு வரத்துத் துறை அமைச் சர் சிவசங்கர் அறிவித் துள்ளார். சி.என்.ஜி. எரி பொருளில் இயங்கும் வகையில் மேலும் 750  பேருந்துகளை மாற்ற  உத்தரவிடப்பட்டுள்ள தாகவும் தெரிவித்தார்.

கோவை, ஈரோடு மாவட்டங்களில் நவ.25, 26-இல் முதல்வர் கள ஆய்வு சென்னை: நவம்பர் 25, 26 ஆகிய இரண்டு நாள்களில் கோவை, ஈரோடு மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் களஆய்வு மேற்கொள்கிறார். நவம்பர் 25 ஆம் தேதி கோவை காந்திநகரில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.50 கோடி செலவில் உலகத் தரத்தில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழிப் பூங்காவை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். அன்று மாலையில் தொழில் துறை சார்பில் நடைபெறும் “TN Rise” நிகழ்ச்சியில், முதலமைச்சர் முன்னிலை யில் பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந் தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. நவம்பர் 26 ஆம் தேதி காலை ஈரோடு மாவட்டம் மொடக் குறிச்சி ஜெயராமபுரத்தில் ரூ.4.90 கோடி மதிப்பில் அமைக்கப் பட்டுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் உருவச் சிலையுடன் கூடிய அரங்கத்தை திறந்து வைக்கிறார். தொ டர்ந்து ஓடாநிலையில் உள்ள தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செலுத்துகிறார். அதன்பின் ஈரோடு சோலார் பேருந்து நிலையத்தில் நடை பெறும் அரசு விழாவில், ரூ.605 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளைத் திறந்து வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 1,84,491 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். மாலையில் ஈரோடு சித்தோடு ஆவின் பால்பண்ணை வளாகத்தில் பால்வளத் தந்தை சி.கு.பரமசிவன் உருவச் சிலையை திறந்து வைக்கிறார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.