முந்தய பக்கம்

கவிஞர் தமிழ் ஒளி நினைவுதினம் அனுசரிப்பு

30 Mar 2026, 3:40 pm
கவிஞர் தமிழ் ஒளி நினைவுதினம் அனுசரிப்பு
<p><strong>கவிஞர் தமிழ் ஒளி நினைவுதினம் அனுசரிப்பு</strong></p> <p>தருமபுரி மார்ச் 30- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், கவிஞர் தமிழ் ஒளியின் 62 வது நினைவு தினம் அரூரில் அனுசரிக்கப்பட்டது. &nbsp;தமிழ்ஒளியின் படைப்பு கள் குறித்த கலந்துரை யாடல் நிகழ்வு ஞாயிறன்று நடைபெற்றது. இதில், தமு எகச மாநில துணைத்தலைவர் ஆதவன் தீட் சண்யா பங்கேற்று, தமிழ் ஒளியின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான அவரது பயணங் கள் குறித்தும், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள் மற்றும் காப்பியங் கள் குறித்தும் திராவிடர் கழக, பொது வுடைமை அரசியல் ஈடுபாடு குறித்தும் உரை யாற்றினார். இதில், பேராசிரியர் பெரு சுரேஷ் தமிழ் &nbsp;ஒளியின் மே தின வரவேற்பு கவிதையினை வாசித்தார். கவிஞர் நவகவி, தமிழ்ஒளியின் படைப்புகளின் வலிமை குறித்து பேசினார். இந்நிகழ்வில், மாநிலக் குழு உறுப்பினர் மா. செந்தில், வட்டக் கிளை தலைவர் சா. விஜ யன் உள்ளிட்ட மாவட்ட, வட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். &nbsp;இதேபோன்று, பாப்பாரப்பட்டியில் கவி ஞர் தமிழ்ஒளி 62- ஆவது நினைவு நாள் &nbsp;அனுசரிக்கப்பட்டது. தவில் கலைஞர் மு. ஆண்டவன் தலைமை வகித்தார். தமுஎகச மாவட்டச் செயலாளர் வே.விசுவநாதன் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தமுஎகச கொள்கை குறிப்பு புத்தகம் வழங்கப்பட்டது. தருமபுரி முத்து இல்லத்தில் கவிஞர் தமிழ் ஒளி உருவப் படத்துக்கு மாலை வைத்து மரி யாதை செலுத்தப்பட்டது. இதில், மார்க்சிஸ்ட் &nbsp;கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் இரா.சிசுபாலன் உள்ளிட்ட திரளானோர் பங் கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram