முந்தய பக்கம்

கவிஞர் புவியரசு மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்!

30 Jun 2026, 6:30 pm
கவிஞர் புவியரசு மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்!

வானம்பாடி இயக்க கவிஞர்களில் ஒருவரும், இரண்டு முறை சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்பாளியுமான கவிஞர் புவியரசு மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு இரங்கல் தெரிவித்துள்ளது.

இது குறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

"வானம்பாடி இயக்க கவிஞர்களில் ஒருவரும், இரண்டு முறை சாகித்ய அகாடமி விருது பெற்ற படைப்பாளியுமான கவிஞர் புவியரசு மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வானம்பாடி இயக்கம் தமிழ் இலக்கிய உலகில் அதிர்வுகளை ஏற்படுத்தியது. அந்த இயக்கத்தை உருவாக்கியதில் கவிஞர் புவியரசுக்கு முக்கியப் பங்கு உண்டு. அவருடைய கவிதைகள், எப்போதும் உழைக்கும் மக்களையே பாடுபொருளாக கொண்டிருந்தது.

தன்னுடைய பங்களிப்பின் மூலம் இரண்டு முறை சாகித்ய அகாடமி விருதுபெற்ற தோழர் புவியரசு, நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஏராளமான நூல்களை மொழிபெயர்த்துள்ளார். தமிழுக்கு வளம் சேர்த்த தோழர் புவியரசு, தன்னுடைய எழுத்துக்களின் வழியாக என்றென்றும் நிலைத்து நிற்பார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு கட்சியின் சார்பில் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறோம்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram