போத்தனூர் யார்டில் சிக்னல் பராமரிப்புப் பணி: ரயில் சேவைகளில் அதிரடி மாற்றம்
6 May 2026, 1:03 am

போத்தனூர் யார்டில் சிக்னல் பராமரிப்புப் பணி: ரயில் சேவைகளில் அதிரடி மாற்றம்

சேலம், மே 5- கோவை மாவட்டம், போத்தனூர் ரயில்வே யார்டில் சிக்னல் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் பரா மரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதன் காரண மாக, மே 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் பல்வேறு ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ஜி. மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், பாதியில் நிறுத்தப்படும் ரயில்கள் தன்பாத்திலிருந்து புறப்பட்டு மே 6 ஆம் தேதி போத்தனூர் வர வேண்டிய அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 16620) கோயம்புத்தூர் சந்திப்பு வரை இயக்க வேண்டும். அதேபோல், கண்ணூரிலிருந்து கோவை வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16607) மே 6, 7 ஆகிய தேதிகளில் பாலக்காடு வரை மட்டுமே இயக்கப் படும். மதுரையிலிருந்து கோவை வரும் எக்ஸ்பிரஸ் ரயில் (16722) பொள்ளாச்சியுடன் நிறுத்தப்படும். மேட்டுப்பாளையத்திலிருந்து போத்தனூர் வரும் மெமு ரயில் (66615) கோவை சந்திப்புடன் தனது பய ணத்தை நிறைவு செய்யும்.

துவக்க இடத்தில் மாற்றம்

மறுமார்க்கமாக, கோவையிலிருந்து மதுரை செல்ல வேண்டிய எக்ஸ்பிரஸ் ரயில் (16721) மே 6, 7 தேதிகளில் கோயம்புத்தூருக்குப் பதிலாக பொள் ளாச்சியிலிருந்து மதியம் 3.30 மணிக்குத் துவங்கும். கோவை - கண்ணூர் எக்ஸ்பிரஸ் (16608) பாலக் காட்டிலிருந்து மாலை 3.10 மணிக்கும், போத்தனூர் - மேட்டுப்பாளையம் மெமு ரயில் (66616) கோவை சந் திப்பிலிருந்து மாலை 3.45 மணிக்கும் புறப்படும்.

ரயில்கள் தாமதம்

பராமரிப்புப் பணி காரணமாக, மே 6-ஆம் தேதி திருவனந்தபுரம் நார்த் - கோரக்பூர் ரப்திசாகர் எக்ஸ் பிரஸ் மற்றும் மே 7 ஆம் தேதி திருவனந்தபுரம் நார்த் - கோர்பா ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் மதுக் கரை ரயில் நிலையத்தில் சுமார் 20 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு (Regulated) இயக்கப்படும் எனத் தெரி விக்கப்பட்டுள்ளது.