தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

போக்சோவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரூ.110.64 கோடி இழப்பீடு : ஆர்டிஐ தகவல்

1 Nov 2026, 10:17 pm
போக்சோவில் பாதிக்கப்பட்ட  குழந்தைகளுக்கு ரூ.110.64 கோடி இழப்பீடு : ஆர்டிஐ தகவல்

போக்சோவில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரூ.110.64 கோடி இழப்பீடு : ஆர்டிஐ தகவல்

மதுரை, நவ.1 - தமிழகத்தில் போக்சோ (POCSO) சட்டத்தின்கீழ் பதிவு செய்யப்பட்ட பாலியல் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, 2021 மே மாதம் முதல் 2026 ஜூலை வரை இடைக்கால மற்றும் இறுதி இழப்பீடாக மொத்தம் ரூ.110.64 கோடி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில் தெரிய வந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பிரபாகர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையிடம் பெறப்பட்ட விபரங்களின்படி, 37 மாவட்டங்கள் மற்றும் சென்னை வடக்கு, தெற்கு எனப் பிரிக்கப்பட்ட பகுதிகளின் அடிப்படையில் இழப்பீடு விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

இழப்பீட்டில் முதலிடம் பிடித்த மாவட்டம்

இடைக்கால இழப்பீட்டில் நாமக்கல் மாவட்டம் ரூ.3.21 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. இறுதி இழப்பீட்டில் கடலூர் மாவட்டம் ரூ.5.19 கோடியுடன் முதலிடத்தில் உள்ளது. மதுரை மாவட்டத்தில், இடைக்கால இழப்பீடாக ரூ.30.35 லட்சமும், இறுதி இழப்பீடாக ரூ.2.47 கோடியும் வழங்கப்பட்டுள்ளன. இடைக்கால இழப்பீடு மற்றும் இறுதி இழப்பீடு என இரண்டு வகைகளிலும் சேர்த்து தமிழக அளவில் ரூ.110 கோடிக்கும் அதிகமான தொகை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்பட்டிருப்பது இந்த ஆர்டிஐ தகவல் மூலம் தெரிய வந்துள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.