தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

‘ஜெம்’ வீரமணி வழக்கில் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்! சிபிஎம் ஆவேச ஆர்ப்பாட்டம்

25 Sept 2026, 11:24 pm
‘ஜெம்’ வீரமணி வழக்கில் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்! சிபிஎம் ஆவேச ஆர்ப்பாட்டம்

‘ஜெம்’ வீரமணி வழக்கில் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்!

சிபிஎம் ஆவேச ஆர்ப்பாட்டம்

சென்னை, செப். 25 -ஜெம் கிரானைட் வீரமணி மீதான போக்சோ வழக்கை துரிதப்படுத்தி குற்றவாளிகளுக்கு சட்டப்படி கடுமையான தண்டனை கிடைப்பதைஉறுதிப்படுத்த வேண்டும் என்றும், காவல்துறை ஆணையர் மேற்பார்வையில் நடைபெறும் விசாரணையை ஏற்கமுடியாது எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.விரிவான விசாரணை நடத்தி, கடந்த ஆட்சிகளின் போது வீரமணியைக் காப்பாற்ற உதவியோரையும் வழக்கிற்குள் கொண்டுவர வேண்டும் எனக் கோரி, கட்சியின் வேளச்சேரிபகுதிச் செயலாளர் எஸ்.முகமது ரஃபி தலைமையில் வெள்ளியன்று (செப்.25) தரமணியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீதிபதி உத்தரவால் வெளிச்சத்திற்கு

இதையொட்டி நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பெ.சண்முகம் பேசுகையில், ஏராளமான குழந்தைகளை பல ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியிருப்பது அதிர்ச்சியளிப்ப தாகவும், இதை மூடி மறைக்க காவல் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும்சம்பந்தப்பட்டுள்ளதாகவும், தினமும்புதிய நபர்களின் பெயர்கள் வெளிவருவதாகவும் தெரிவித்தார். போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பத்மா சண்முக சுந்தரத்தின் உத்தரவால் மட்டுமே இந்த வழக்கு வெளி உலகுக்கு வந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிகாரிகளைப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்

20 ஆண்டுகளுக்கும் மேலாக வீரமணி மீது பலமுறை புகார் அளிக்கப்பட்டும், காவல்துறை உரிய முறையில் விசாரிக்காததால் குற்றம் தொடர்ந்ததாகவும், உயர் அதிகாரிகளின் முழுமையான ஆதரவோடுதான் குற்றவாளிகள் தப்பியதாகவும் அவர்குற்றம்சாட்டினார். ஆரம்ப ஆதாரங்களின் அடிப்படையில் காவல் அதிகாரிகள் அருண், கண்ணன், யாஸ்மின் உள்ளிட்டோர் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் அதே பொறுப்பில் தொடர்ந்தால் சாட்சிகளைக் கலைக்கவும் ஆவணங்களை அழிக்கவும் வாய்ப்புள்ளதால் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என்றார். பாதிக்கப்பட்ட குழந்தை களின் வீடியோவை சில ஊடகங்கள் வெளியிட்டிருப்பது கண்டிக்கத் தக்கது எனவும், செய்தி தருவதில்முந்திக்கொள்ளும் போட்டியில் குழந்தைகளைப் பலியாக்கக் கூடாது எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

“கூட்டு சதி” - திமுக, அதிமுக ஆட்சிகள் மீது குற்றச்சாட்டு

செய்தியாளர்களின் கேள்விக்குபதிலளித்த அவர், திமுக ஆட்சியில் புகார் அளிக்கப்பட்டு எஃப்ஐஆர் பதிவானபிறகும் மேல்விசாரணை நடைபெறாததற்கு யார் அரசியல் அழுத்தம் கொடுத்தார்கள் என்பதற்கு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கையில் பதில் இல்லை எனவிமர்சித்தார். 2024 நவம்பரிலேயே புகார் அளிக்கப்பட்டு, 2025-இல் எஃப்ஐஆர் பதிவான பின் விசாரணை நடத்தாமல் வழக்கை முடிக்கதிமுக ஆட்சியில் முடிவெடுக்கப்பட்ட தாகவும், அதிமுக-திமுக ஆட்சிக் காலங்களில் காவல் அதிகாரிகள் கூட்டாகசதி செய்து குற்றத்தை மூடி மறைக்க முயன்றதாகவும், கோடிக்கணக்கில் பணம் கைமாறியதாகவும் அவர் தெரிவித்தார்.

உயிரைக் காக்க வேண்டும் - எஸ்ஐடி கோரிக்கை

இதைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் பேசிய பெ.சண்முகம், பட்டியல் சமூகக் குழந்தைகளின் ஏழ்மையைப் பயன்படுத்தி வீரமணி உள்ளிட்டோர் கொடூரமான செயலில் ஈடுபட்டதாகவும், ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கு

சிறையில்தற்கொலை என்று மூடப்பட்டதைச் சுட்டிக்காட்டி வீரமணியை உயிரோடு பாதுகாக்க தேவைப்பட்டால் தனிச்சிறையில் வைக்க வேண்டும் எனவும் கோரினார். இந்த வழக்கை அரசியலாக்க விரும்பவில்லை எனவும், வழக்கை முடிக்காமல் தொடர்ந்து விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதி பத்மாவை தமது கட்சி பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார். ஒரு காவல் அதிகாரி செய்த தவறை இன்னொரு அதிகாரி விசாரிப்பதை ஏற்கமுடியாது எனவும், காவலர் முதல் ஆணையர் வரை குற்றவாளிகளாக இருக்கும் நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு, காலவரம்புடன் விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

கம்யூனிஸ்ட் கட்சியும் மாதர் சங்கமும் தலையிடாத பாலியல் வன்கொடுமை வழக்கு எதுவும் இல்லை எனவும், எங்களது நிலைப்பாட்டைக் கேட்பதற்கு முன்அரசின் நிலை என்ன எனச் சொல்லுமாறு அமைச்சர்களைக் கேட்டுக்கொண்ட அவர், குற்றவாளிகள் தப்பாத புதிய வரலாற்றைப் படைக்க தவெகவுக்கு வாய்ப்பு கிடைத்துஉள்ளதாகவும் தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர்கே.வனஜகுமாரி, செயற்குழு உறுப்பினர் க.பீம்ராவ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டச் செயலாளர்ம.சித்ரகலா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.