தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிறுமியிடம் பாலியல் சீண்டல் போக்சோ பிரிவில் கைது

27 May 2026, 11:41 pm
சிறுமியிடம் பாலியல் சீண்டல் போக்சோ பிரிவில் கைது
<p><strong>சிறுமியிடம் பாலியல் சீண்டல் போக்சோ பிரிவில் கைது</strong></p><p>கோவை, மே 27 – சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடு பட்டவர்கள் போக்சோ பிரிவில் கைது செய்யப்பட்டனர். கோவை அவிநாசி சாலை அண்ணா சிலை அருகே பிரபல நாளிதழின் நிருப ராக பணியாற்றி வருபவர் முத்துக் குமார். இவர் தன் வீட்டின் அருகே இருந்த சிறுமியை வீட்டிற்கு வரவ ழைத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள் ளார். இதனால் அச்சமடைந்த சிறுமி, அங்கிருந்து தப்பி, வீட்டிற்கு வந்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து, சிறுமியின் தாயின் நண் பர் போல வீட்டிற்கு வந்த விசாரணை அதிகாரி, சிறுமியிடம் இயல்பாக பேசி, முத்துக்குமார் பாலியல் சீண்டலில் ஈடு பட்டதை உறுதி செய்தனர். இதனை யறிந்து தென்காசியில் உள்ள அவரது வீட்டிற்கு தப்பிச்சென்ற நிருபரை, தனிப்படை போலீசார் சென்று பிடித்து வந்தனர். இதனைத்தொடர்ந்து போக்சோ பிரிவில் கைது செய்து சிறை யில் அடைத்தனர். சேலம் இதேபோன்று, சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே கோணசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சீரங்கன் (51). இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மகுடஞ்சாவடி பகுதியில் உள்ள மின் கம்பத்தை ஆய்வு செய்துவிட்டு அருகிலிருந்த வீட்டில் தனியாக இருந்த 16 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீற லில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி யடைந்த சிறுமி, பெற்றோரிடம் தெரி வித்துள்ளார். பின்னர் சிறுமியின் தாய், சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆய்வாளர் கார்த்திகேயனி சீரங் கன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்த னர். பின்னர் அவர் சங்ககிரி நீதிமன்றத் தில் நேர்நிறுத்தப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.