தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ரிசர்வ் வங்கி பெயரில் ரூ. 8 கோடி மோசடி பாமக நிர்வாகி உட்பட 2 பேர் கைது

11 Dec 2025, 5:47 pm
ரிசர்வ் வங்கி பெயரில் ரூ. 8 கோடி மோசடி பாமக நிர்வாகி உட்பட 2 பேர் கைது

ரிசர்வ் வங்கி பெயரில் ரூ. 8 கோடி மோசடி பாமக நிர்வாகி உட்பட 2 பேர் கைது

சேலம், டிச.11- ரிசர்வ் வங்கி பெயரில் ரூ.8 கோடி மோசடி  செய்த, பாமக நிர்வாகி உட்பட இரண்டு பேரை  சிபிசிஐடி போலீசார் கைது செய்து, விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்திய ரிசர்வ் வங்கியின் பெயரில் போலி யான ஆவணங்களை தயாரித்து முறையாக பதிவு செய்யாமல் தொண்டு நிறுவனங்கள் நடத்தி இரிடியம் விற்பனை செய்வதால் வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வருவதாக ஒரு கும்பல் தமிழ்நாடு முழுவதும் மோசடியில் ஈடுபட்டது. இது பற்றி சேலம் சிபிசிஐடி காவல்துறை யினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் ரிசர்வ் வங்கி பெயரை பயன்படுத்தி இரிடியம் விற்பனையில் பல  கோடி கிடைக்கும் என பொய் கூறி தமிழ்நாட் டைச் சேர்ந்த பல்வேறு மோசடி கும்பல்கள்  பொதுமக்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் பெற்று ஏமாற்றியதை கண்டறிந்தனர். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்க ளில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை  தீவிரப்படுத்தினர். அதில் 20க்கும் மேற்பட்ட  வழக்குகளில் 60 பேரை போலீசார் கைது  செய்து சிறையில் அடைத்தனர். தொடர்ந்து தற்பொழுது ரிசர்வ் வங்கி பெயரில் பண மோசடி செய்வதாக சிபிசிஐடி  போலீசாருக்கு பொதுமக்கள் சார்பில் புகார் கள் வந்த வண்ணமாக உள்ளது. இந்த வகை யில் சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே  உள்ள ஆர்.சி செட்டிபட்டி சேர்ந்த கட்டுமான  தொழில் நிறுவனம் நடத்தி வரும் லாசர் என் பவர் சேலம் சிபிசிஐடி போலீசில் ஒரு புகார்  கொடுத்தார். அதில் ரிசர்வ் வங்கி பெயரில்  இரிடியம் விற்பனை செய்தால் பல கோடி கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி தன்னிடம் இருந்த ரூ.7 லட்சம் பணத்தை ஓமலூர் சேர்ந்த செல்லதுரை ஈரோடு மாவட்டம், பவானியை சேர்ந்த தினேஷ்குமார் உள்ளிட்ட நான்கு பேர் பெற் றுக்கொண்டு மோசடி செய்து விட்டனர். தன் னைப்போல் பலரிடம் அவர்கள் கோடிக் கணக்கில் மோசடி செய்துள்ளனர் எனக் கூறி யிருந்தார் இப்புகார் பற்றி சேலம் சிபிசிஐடி துணை  காவல் கண்காணிப்பாளர் வினோத், ஆய்வா ளர் ஜெயக்குமார் ஆகியோர் தலைமையி லான காவல்துறையினர் விசாரணை நடத்தி  வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து இம் மோசடியில் ஈடுபட்ட பவானியை சேர்ந்த தினேஷ்குமார், ஓமலூர் பல்பாக்கியியை சேர்ந்த செல்லதுரை ஆகிய இரண்டு பேரை  அதிரடியாக கைது செய்தனர். இதில் தினேஷ்குமார் பவானி பாமக நகரச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தது தெரிய வந்தது. கைதான 2 பேரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தியதில். இவர்கள் இருவர் உட்பட நான்கு பேர் சேர்ந்து  சேலம், நாமக்கல், ஈரோடு, திருப்பூர், கோவை  மாவட்டங்களில் பலரிடம் ரிசர்வ் வங்கி பெயரை பயன்படுத்தி இரிடியம் விற்பனை என மோசடியை அரங்கேற்று உள்ளனர். ஒட்டுமொத்தமாக எட்டு கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது தெரியவந்தது. கைதான தினேஷ்குமார் செல்லதுரையிடமிருந்து நான்கு செல்ஃபோன் ஒரு லேப்டாப் மோசடி  ஆவணங்கள் போன்றவற்றை சிபிசிஐடி காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். அந்த செல்போன் லேப்டாப்பில் உள்ள  தரவுகளை வைத்து யாரிடம் எல்லாம் எவ்வ ளவு மோசடி செய்தார்கள் என்ற விவரங் களை போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும் இவர்கள் மீது சேலம், நாமக்கல், ஈரோடு, கோவை மாவட்டங்களில் பலரும்  சிபிசிஐடி போலீஸ் புகார் கொடுத்துள்ளனர்.  அந்த புகார்களை ஒன்றிணைத்து விசா ரணை நடத்த முடிவு செய்துள்ளனர் இரண்டு பேரை கைது செய்த நிலையில்  இவர்களின் கூட்டாளிகள் இரண்டு பேரை சேலம் சிபிசிஐடி காவல்துறையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். எட்டு கோடி  மோசடி வழக்கில் பாமக நிர்வாகி உட்பட இரண்டு பேர் கைதான சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.