பன்முகத்தன்மைக்கு எதிரான பி.எம்.ஸ்ரீ பள்ளிகள்!
9 Jan 2026, 3:41 pm
<p><strong>பன்முகத்தன்மைக்கு எதிரான பி.எம்.ஸ்ரீ பள்ளிகள்!</strong></p>
<p>ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் (NEP 2020) ஒரு முக்கிய அங்கமாக, நாடு முழு வதும் ‘பி.எம். ஸ்ரீ’ (PM SHRI - Prime Minister Schools for Rising India) எனப்படும் முன் மாதிரி பள்ளிகளைத் தொடங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, சுமார் 14,500 பள்ளிகளைத் தரம் உயர்த்த ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ. 27,360 கோடி செலவிட ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள் ளது. இதில், ஒன்றிய அரசின் பங்கு ரூ. 18,128 கோடி. மீதமுள்ள தொகையை மாநில அரசு கள் ஏற்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்தி யாவில் இதுவரை 670 மாவட்டங்களில் உள்ள 13,070 பள்ளிகள் இதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் தொடக்கப்பள்ளி கள் முதல் மேல்நிலைப்பள்ளிகள் வரை, கேந் திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளி களும் அடங்கும். கட்டமைப்பும் செயல்பாடும் தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், நவீன ஆய்வகங் கள், கணினி வசதிகள், ஐசிடி (ICT) ஆய்வ கங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்ற உயர்தரக் கட்டமைப்புகள் உரு வாக்கப்படும். இந்தப் பள்ளிகள் வெறும் கல்வி நிலையங்களாக மட்டுமல்லாமல், அரு காமையில் உள்ள இதர அரசுப் பள்ளிகளுக்கு வழிகாட்டும் ‘தலைமைப் பள்ளிகளாக’ (Mentor Schools) செயல்படும் என அறி விக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் கல்வித்துறையில் நவீன மாற்றத்தைக் கொண்டு வரும் என அரசு கூறினாலும், கல்வி ஆர்வலர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் மத்தியில் இது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள் ளது. இந்தப் பள்ளிகள் தேசிய கல்விக் கொள்கை 2020-ன் ‘குழந்தைகளாகவே’ பார்க்கப்படுகின்றன. நாடு முழுவதும் ஒரே மாதிரியான கல்விக் கொள்கையை செயல் படுத்துவதன் மூலம், மாநிலங்களின் கல்வி உரிமைகள் பறிக்கப்படுவதாகக் கருதப்படு கிறது. அறிவியல் கல்வி மதச்சார்பின்மை சமூக நீதி ஆகிய கருத்துக்கள் பின்னுக்கு தள்ளப் படும். இந்துமதம் சார்ந்த வரலாற்று திரிபுகள் மத வெறுப்பு, சமஸ்கிருத மொழி, இந்தி திணிப்பு என அனைத்தையும் தன்னகத்தே கொண்ட பாடத்திட்டங்களுக்கு அதிக முக் கியத்துவம் அளிக்கப்படுவதும், சமூக நீதி போன்ற விழுமியங்கள் பின்னுக்குத் தள்ளப் படுவதும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள் ளது. கல்வியாளர்கள் அல்லாத மதவாதி கள் அல்லது நீதி போதனை செய்பவர்கள் என்ற பெயரில் வெளிநபர்கள் கல்விப் பணி யில் ஈடுபட அனுமதிப்பது, பள்ளிகளின் மதச் சார்பற்ற தன்மையை சிதைக்கும் என்ற அச் சம் நிலவுகிறது. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் ‘பள்ளிகளின் ஒருங் கிணைப்பு’ (School Clustering) என்ற பெய ரில் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வரும் சூழலில், பி.எம். ஸ்ரீ பள்ளி கள் அதற்குத் தலைமை தாங்கும் அமைப் பாக மாறுவது ‘யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே’ என்ற பழமொழிக்கு ஏற்ப அமைந்துள்ளதாக விமர்சிக்கப்படு கிறது. தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் இத்திட்டத்தின் சில நிபந்தனைகள் மற்றும் தேசிய கல்விக் கொள் கையின் கூறுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட வில்லை. இது ஒரு குறிப்பிட்ட மேல்தட்டு வர்க்கத்தை உருவாக்கும் முயற்சியாகவும், இந்தியப் பன்முகத்தன்மைக்கு எதிரானது என்றும் இந்த மாநிலங்கள் கருதுகின்றன. அனைத்து மக்களுக்குமான பொதுக் கல்வி முறையை வலுப்படுத்துவதற்குப் பதி லாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சில பள்ளிகளை மட்டும் நவீனப்படுத்துவதும், அதன் மூலம் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தைப் புகுத்துவ தும் ஆரோக்கியமான கல்வி வளர்ச்சிக்கு வழி வகுக்குமா என்பது கேள்விக்குறியே. பன் முகத்தன்மை கொண்ட இந்தியாவில், கல்வி யானது சமூக நீதி மற்றும் அறிவியல் பார்வை யின் அடிப்படையில் அமைய வேண்டுமே தவிர, ஒரு சார்பு நிலைப்பாட்டை நோக்கிய தாக இருக்கக் கூடாது என்பதே சமூக செயற் பாட்டாளர்களின் கோரிக்கையாக உள்ளது. -ச.செல்லத்துரை, உடுமலைப்பேட்டை</p>
