முந்தய பக்கம்

மேற்கு ஆசிய நாடுகளின் நிலைமை தொடர்பான நிலைப்பாட்டை மோடி விளக்குவாரா?

9 May 2026, 9:38 pm
மேற்கு ஆசிய நாடுகளின் நிலைமை தொடர்பான நிலைப்பாட்டை  மோடி விளக்குவாரா?
<p><strong>மேற்கு ஆசிய நாடுகளின் நிலைமை தொடர்பான நிலைப்பாட்டை மோடி விளக்குவாரா?</strong></p><p>பிரதமர் மோடி இந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். மே 15 முதல் 20 வரை 4 ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்வதற்கு முன்னதாக, மே 15 அன்று அவர் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணத்தை மேற் கொள்கிறார் என்று கூறப்படுகிறது. </p><p> இந்நிலையில், இந்த பயணத்தின் போது இந்தியாவின் நிலைப்பாட்டை பிரதமர் மோடி வெளிப்படுத்துவாரா? என மூத்த பத்திரி கையாளர் சுஹாசினி ஹைதர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”போர் காரண மாக வளைகுடா நாடுகளுக்கு இடை யிலான இடைவெளி அதிகரித்து வரு கிறது. எண்ணெய் உற்பத்தி, ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகை, இஸ்ரேலுடனான உறவுகள் எனப் பல்வேறு விவகாரங்க ளில் பிளவுகள் மிக மோசமாகி வரு கின்றன. ஐக்கிய அரபு அமீரகம், ஈரான், சவூதி அரேபியா ஆகிய நாடுகள் மேற்கு ஆசியாவை ஒரு பல்துருவ மண்டல மாக மாற்றி வருகிறது. பிராந்திய பதற்றங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடி அபுதாபிக்கு (ஐக்கிய அரபு அமீரகம்) பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின் போது மேற்கு ஆசிய நாடு களின் நிலைமை தொடர்பான இந்தியா வின் நிலைப்பாடு என்ன, இந்தியா ஒரு தரப்பை மட்டும் ஆதரிக்கும் நிலையில் உள்ளதா? என்பதை மோடி விளக்கு வாரா?” என அவர் கேள்வி எழுப்பி யுள்ளார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram