தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சுவீடன் சென்ற பிரதமர் மோடி; புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து!

18 May 2026, 9:10 pm
சுவீடன் சென்ற பிரதமர் மோடி; புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து!

சுவீடன் சென்ற பிரதமர் மோடி; புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து!

கோதன்பர்க், மே 18 - இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 6 நாள் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக சுவீடன் நாட்டுக்கு சென்றுள்ள அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேம்படுத்தும் வகையிலான ஒப்பந்தங்களை ஏற்படுத்தியுள்ளனர்.

சுவீடனின் கோதன்பர்க் (Gothenburg) நகரில் நடை பெற்ற சந்திப்பில், இந்தியப் பிரத மர் மோடி, ஸ்வீடன் பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன், ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது, இந்தியா மற்றும் சுவீடன் இடையிலான உறவை மேம்படுத்தும் வகையிலான கூட்டு அதிரடித் திட்டம் (Joint Action Plan 2026-2030) அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI), பாதுகாப்புத் துறை, விண்வெளி, பசுமை ஆற்றல் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு உள்ளிட்ட உயர் தொழில்நுட்பத் துறைகளில் இந்தியாவின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே இக்கூட்டணியின் முக்கிய நோக்கம் என கூறப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்திற்கு பிறகு வரும் நாட்களில் ஸ்வீடன் நிறுவனங்களிடமிருந்து பொருட்களை இறக்குமதி மட்டும் செய்யாமல் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ (Make in India) திட்டத்தின் கீழ் இணைந்து உற்பத்தி செய்யப்படும் என கூறப்படுகிறது.

மேலும் ‘வீனஸ் ஆர்பிட்டர்’ என்ற சுக்கிரன் விண்கலத் திட்டத்திற்கான அதிநவீனக் கருவி ஒன்றை இரு நாடுகளின் விண்வெளி நிறுவனங்களும் இணைந்து உருவாக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கு இடையி லான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடுகளை அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இருமடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சுவீடனின் சந்தையை விட இந்தியாவின் சந்தை பெரியது. இதனால் சுவீடன் பொருட்கள் அதிகளவில் இந்திய சந்தைக்கு வரும். இதனால் அந்நாட்டுக்கே லாபம் அதிகம். இது வரக் கூடிய நாட்களிலேயே தெரிய வரும் என கூறப்படுகிறது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.