அசாம் தேயிலைத் தோட்டத்தில் மோடி ஷூட்டிங்
2 Apr 2026, 5:30 am

அசாம் தேயிலைத் தோட்டத்தில் மோடி ஷூட்டிங்

ஏப்ரல் 9ஆம் தேதி அசாமில் ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி வாரத்திற்கு 2 நாள் அசாம் மாநிலத்திற்கு சென்று வருகிறார்.

இந்நிலையில், அசாம் சென்றுள்ள மோடி, திருசூரிய உள்ள தேயிலைத் தோட்டத்தில் 5 கேமராக்களுடன் சிறப்பு ஷூட்டிங் நடத்தினார். இந்த ஷூட்டிங்கில் தேயிலை பறிக்கும் பெண்களுடன் அவர் கலந்துரையாடினார்.

தேர்தல் பிரச்சாரத்திற்காக தேயிலை தொழிலாளர்களுடன் உரையாடுவது போன்ற ஷூட்டிங்கிற்கு முன்கூட்டியே ஆட்கள் சேர்க்கப்பட்டு, திரைக்கதை கொடுக்கப்பட்டு குறும்படம் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்த வீடியோ குறித்து மோடி கூறுகையில், தேயிலை என்பது அசாம் மாநிலத்தின் ஆன்மா என்றும், தொழிலாளர்களுடன் கலந்துரையாடியது மறக்க முடியாத அனுபவம் என்றும் தெரிவித்துள்ளார்.