செய்தியாளர் சந்திப்பை கண்டு ஓட்டம் பிடிக்கும் பிரதமர் மோடி ஒன்றிய அமைச்சகத்திற்கு இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம்
17 Jul 2026, 8:21 pm

செய்தியாளர் சந்திப்பை கண்டு ஓட்டம் பிடிக்கும் பிரதமர் மோடி ஒன்றிய அமைச்சகத்திற்கு இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம்

புதுதில்லி பிரதமர் மோடி வெளிநாடுகளிலும், உள் நாட்டிலும் முறைப்படியான செய்தியா ளர் சந்திப்புகளைத் தவிர்ப்பதை ஒன்றிய வெளி யுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரி ருத்ரேந்திர டாண்டன் ஜூலை 10ஆம் தேதி நியூசி லாந்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது நியாயப்படுத்தினார். அதாவது, “பிரதமர் மோடி ஒரு சிறந்த இந்திய அரசியல்வாதி. அவர் வாக்காளர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்வதையே விரும்புகிறார். இந்திய வாக்காளர்கள் பெரும்பாலும் கிராமப்புறத்தை சேர்ந்தவர்கள் என்பதால், ஊடகங்கள் போன்ற இடைத்தரகர்கள் மூலம் பேசுவதை விட, நேர டித் தொடர்பையே பிரதமர் முன்னிறுத்துகிறார்” என்று பிரதமர் மோடி செய்தியாளர் சந்திப்பை தவிர்ப்பதற்கு ஆதரவாக முட்டு கொடுக்கும் வகையில் ருத்ரேந்திர டாண்டன் பேசினார்.

இந்நிலையில், ஒன்றிய அமைச்சகத்தின் அதிகாரி ருத்ரேந்திர டாண்டனின் பேச்சுக்கு இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிக்கையில்,”பிரதமர் மோடி, உள்நாட்டிலோ அல்லது வெளிநாட்டிலோ திட்டமிடப்படாத செய்தியாளர் சந்திப்புகளை எதிர்கொள்ள விருப்பம் காட்டாததற்கு, அவர் ஒரு வெற்றிகர மான அரசியல்வாதி என்பதால் தனது கிராமப்புற வாக்காளர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதையே விரும்புகிறார் என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரி விளக்கம் அளித்து நியாயப்படுத்துவதை இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மோடி தயக்கம் காட்டுகிறார்

பிரதமர் ஏன் ஊடகங்களின் கேள்விகளை எதிர்கொள்வதில்லை என்பதற்கு, வெளியுற வுத்துறை அமைச்சக அதிகாரி முன்வைக்கும் வாதம் மிகவும் தவறானது. அதாவது அதிகாரி ருத்ரேந்திர டாண்டனின் விளக்கம் ‘ஆழமற்றது’ மற்றும் ‘ஏற்க முடியாதது’. மேற்கு ஆசியா வில் ஏற்பட்டுள்ள போரினால் உலகம் முன்னெப் போதும் இல்லாத எரிசக்தி நெருக்கடியில் சிக்கி யுள்ளது. இத்தகைய சூழலில், பிரதமர் தனது நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் எழுப்பும் அவசர அரசியல் மற்றும் பொருளாதார சிக்கல் களுக்குத் தொடர்ந்து பதிலளிக்க வேண்டிய கட மை உடையவர். ஆனால், இத்தகைய பெரும் நெருக்கடி குறித்து எவ்வித ஊடகங்களிடமும் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள அவர் தயக்கம் காட்டி வருவதுதான் உண்மை.

ஜனநாயக உலகம் முழுவதும், தலைவர்கள் ஊடகங்களைப் புறக்கணிப்பதில்லை; மாறாக, ஜனநாயகச் செயல்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக ஊடகங்களுடன் தொடர்ந்து கலந்துரையாடுகின்றனர். ஒவ்வொரு இயங்கக் கூடிய ஜனநாயகத்திலும், ஊடகங்கள் பொது மக்களின் சார்பில் பேசி, அரசுப் பொறுப்பில் உள்ளவர்களிடம் பதிலளிக்கும் பொறுப்பைக் கோருகின்றன. மேலும் மக்கள் எதிர்கொள்ளும் அவசர மற்றும் முக்கியமான பிரச்சனைகளு க்குப் பதில்களைப் பெறுகின்றன. சமூக ஊடகங்கள் வழியாக மட்டுமே மேற்கொள்ளப் படும் திட்டமிடப்பட்ட, ஒருதலைப்பட்சமான கருத்துப் பரிமாற்றங்கள், சுதந்திரமான ஊடகங்களுடனான பொது உரையாடலுக்கு மாற்றாகாது. உயர்பதவிகளில் இருப்பவர்கள் இத்தகைய மேலோட்டமான கருத்துகளைத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று இந்திய பத்திரிகை ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்துகிறது. இத்தகைய கருத்துகள் (ஒன்றிய அரசின் விளக்கம்) பேச்சு சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்தின் மீது மேலும் ஒரு மந்தமான தாக்கத்தையே ஏற்படுத்தும்” என அதில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளன.