தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிரதமர் மோடியின் அலுவலகம் ஊழல், சூதாட்டங்களால் நிறைந்துள்ளது

6 Dec 2025, 2:48 pm
பிரதமர் மோடியின் அலுவலகம் ஊழல், சூதாட்டங்களால் நிறைந்துள்ளது
<p><strong>பிரதமர் மோடியின் அலுவலகம் ஊழல், சூதாட்டங்களால் நிறைந்துள்ளது</strong></p> <p>&nbsp;</p> <p>மும்பை பிரதமர் மோடியின் அலுவலகம் ஊழல், சூதாட்டங்களால் நிரம்பியுள்ளது என &ldquo;இந்தியா&rdquo; கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிவசேனா (உத்தவ்) கட்சியின் அதிகா ரப்பூர்வ ஏடான சாம்னாவின் தலையங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக தலையங்கத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: &ldquo;பிரதமர் மோடி 2014ஆம் ஆண்டு முதல்,&ldquo;ஊழலைப் பொ றுத்துடக்க்கொள்ள மாட்டேன். ஊழலை ஒழிக்காமல் சாப்பிட மாட்டேன். ஊழலை ஒழித்த பின் தான் சாப்பிடுவேன்&rdquo; என கூறி வருகிறார். ஆனால் கடந்த 11 ஆண்டுகளில் அவரது முழக்கத்திற்கு என்ன நடந்தது? என்ன நடந்து கொண்டு இருக்கிறது? என்பதை நாடு பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது. அதாவது ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், அனைத்து ஊழல்வாதிகளையும் ஒன்றிணைத்து பாஜக தன்னை பெரிய நிதி சாம்ராஜ்ய அமைப்பாக விரிவுபடுத்திக் கொள்கிறது. குறிப்பாக பிரதமர் மோடி இந்த ஊழல்வாதிகளை ஆசீர்வதித்து வருகிறார். பாவங்கள் கழுவப்பட்டு &nbsp;விட்டதாக அர்த்தமல்ல பிரதமர் மோடியின் கண்களுக்கு முன்பாக அவரது அலுவலகத்தில் &ldquo;சூதாட்டம்&rdquo; நடந்து கொண்டிருந்தது. சர்வதேச அளவில் பிரபல மான மகாதேவ் ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சம் கோடி ரூபாய் முறைகேடு செய்யப்பட்டது. இந்த சூதாட்டத்தில் பிரத மருக்கு பிரியமானவர்களும் ஈடுபட்டிருந்த னர். தற்போது அவர்களில் மூன்று பேர் சிக்கி யுள்ளனர். சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரிய வந்ததுடன், பிரதமர் அலுவலகத்தில் பணி புரியும் மற்றும் மோடிக்கு மிகவும் நெருக்கமான வருமான ஹிரேன் ஜோஷி, பிரசார் பாரதி தலைவர் நவ்நீத் சேகல், சட்ட ஆணைய உறுப்பினர் ஹிதேஷ் ஜெயின் ஆகியோரின் பதவிகள் பறிக்கப்பட்டன. இந்த பதவி பறிப்புகளால் பிரதமர் அலுவலகத்தின் பாவங்கள் கழுவப்பட்டுவிட்டதாக அர்த்த மல்ல. பதவி நீக்கம் செய்யப்பட்ட 3 பேரும், கடந்த 4 ஆண்டுகளாக &ldquo;மகாதேவ்&rdquo; செயலி மூலம், ஆன்லைன் சூதாட்டத்தை விளையாட தங்கள் அதிகாரத்தையும், பிரதமர் அலுவலகத்தையும் தவறாக பயன்படுத்தி வந்துள்ளனர். இது வெளியில் கசிய மூவரும் சத்தமில்லாமல் நீக்கப்பட்டுள்ளனர். பிரதமரின் பொய்ப் பிரச்சாரம் அம்பலமானது சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலில் &ldquo;மகா தேவ்&rdquo; சூதாட்டம் ஒரு முக்கிய பிரச்சனையாக இருந்தது. பிரதமர் மோடி சத்தீஸ்கர் பிரச்சா ரத்தின் போது மகாதேவ் செயலிக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையிலான உறவைப் பற்றி அதிகம் பேசினார். குறிப்பாக தேர்தலின் போது கூட, அப்போதைய சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் (காங்கிரஸ் பொதுச்செயலாளர்) இடத்தில் மத்திய அமைப்புகள் சோதனை நடத்தின. அவரது மகன் மகாதேவ் செயலி வழக்கில் கைது செய் யப்பட்டார். ஆனால் இப்போது மகாதேவ் சூதாட்டத் தின் உண்மையான பயனாளிகள் பிரதமர் மோடியின் அலுவலகத்தில் தான் உள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. கடந்த 4 ஆண்டு களில் மகாதேவ் சூதாட்டச் செயலி நிறுவனம் ரூ.50,000 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இந்த வழக்கில், பல கிரிக்கெட் வீரர்கள் மற்றும் நடிகர்கள் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணைக்காக அழைக்கப்பட்டுள் ளனர். ஆனால் மோடிக்கு மிகவும் நெருக்கமான வருமான ஹிரேன் ஜோஷி, நவ்நீத் சேகல், ஹிதேஷ் ஜெயின் ஆகியோரின் பதவிகள் மட்டுமே பறிக்கப்பட்டன. பிரதமருக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதால் நடவடிக்கை மற்றும் சோதனையில் இறங்காமல் அமலாக் கத்துறை மற்றும் சிபிஐ தலைமறைவாகி விட்டது போல உள்ளன. &nbsp;பிரதமர் அலுவலகத்திலேயே ஊழல், சூதாட்டங்கள் நிறைந்துள்ளன. அங்கு கிடைக்கும் பணம் பாஜகவின் அரசியலுக்கு கொண்டு வரப்படுகிறது. மோடியின் ஆட்சியால் நாட்டின் நற்பெயர் இவ்வளவு தாழ்ந்த நிலைக்கு ஒருபோதும் சரிந்ததில்லை. ஆனால் மோடி இவை அனைத்திலும் அமைதியாக இருக்கிறார். உள்துறை அமைச்சர் அமித் ஷா திரைக்குப் பின்னால் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்&rdquo; என அதில் &nbsp;கூறப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.