எரிசக்தி பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை வெனிசுலா இடைக்கால ஜனாதிபதி பிரதமர் மோடியுடன் சந்திப்பு!
5 Jun 2026, 12:32 am

எரிசக்தி பாதுகாப்பு குறித்து பேச்சுவார்த்தை வெனிசுலா இடைக்கால ஜனாதிபதி பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

புதுதில்லி, ஜூன் 4 - இந்தியாவிற்கு ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக வந்துள்ள வெனிசுலா இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ், தலைநகர் தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி யைச் சந்தித்துப் பேசினார்.

இந்த உயர்மட்ட ஆலோசனை யின் போது, இரு நாடுகளுக்கும் இடை யிலான உறவை மேலும் வலுப்படுத்து வது குறித்து தலைவர்கள் இருவரும் விரிவாக விவாதித்தனர்.

குறிப்பாக, எரிசக்தி பாதுகாப்பு (எண்ணெய் வர்த்தகம்), வர்த்தகம் மற்றும் முதலீடு, மருந்துப் பொருட்கள், சுகாதாரம், போக்குவரத்து மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகிய முக்கியத் துறைகளில் கூட்டுறவை மேலும் அதிகப்படுத்துவது குறித்து அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

வெனிசுலாவிடம் இருந்து இந்தியா, நாளொன்றுக்கு 3 முதல் 4 லட்சம் பேரல் வரையிலான கச்சா எண்ணெய்யை வாங்கி வந்தது. இத னிடையே, அமெரிக்க ஏகாதிபத்திய மானது, வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டின் ஜனாதிபதி மதுரோவை கடத்திய பிறகு, வெனி சுலாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று டிரம்ப் மிரட்டல் விதித் தார். மோடி அரசும் கச்சா எண்ணெய் வாங்குவதை குறைத்தது, குறிப்பிடத் தக்கது.

ஜெய்சங்கர் சந்திப்பு

முன்னதாக, வெனிசுலா இடைக் கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக் ஸை, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சந்தித்துப் பேசினார். அப்போது, வெனிசுலா வுடன் உறவை வலுப்படுத்துவதில் இந்தியா கொண்டுள்ள உறுதியை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியாக கூறப்படுகிறது.

ஐந்து நாள் பயணம்

இருதரப்பு உறவுகளை மேம் படுத்தும் நோக்கில், டெல்சி ரோட்ரிக்ஸ் ஜூன் 3 முதல் ஜூன் 7 வரை 5 நாட்கள் இந்தியாவில் தங்கவுள்ள நிலையில், வெனிசுலாவின் வெளியுறவு, பொருளாதாரம் மற்றும் நிதி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு மற்றும் போக்குவரத்து ஆகிய துறை களின் அமைச்சர்கள் அடங்கிய உயர் மட்டக் குழுவினரும் டெல்சி ரோட்ரி க்ஸூடன் இந்தியா வந்துள்ளனர்.

இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வரும் சுமுகமான உறவை மேம்படுத்தவும், புதிய வணிக வாய்ப்புகளை உருவாக்கவும் இந்த ஐந்து நாள் பயணம் மிக முக்கியப் படியாகக் கருதப்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரி வித்துள்ளது.