பிரதமர் மோடி பிரச்சார ஷூட்டிங்கால் விபரீதம் பொரி வியாபாரிக்கு கொலை மிரட்டல் ; பதற்றத்தில் ஜார்கிராம்
23 May 2026, 9:37 pm

பிரதமர் மோடி பிரச்சார ஷூட்டிங்கால் விபரீதம் பொரி வியாபாரிக்கு கொலை மிரட்டல் ; பதற்றத்தில் ஜார்கிராம்

கொல்கத்தா மேற்கு வங்க மாநி லம் ஜார்கிராம் பகு தியைச் சேர்ந்தவர் விக்ரம் ஷா.

இவர் சாலையோ ரத்தில் ‘ஜால்முரி (பொரி - மசாலா)’ வியாபாரம் செய்து வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, பிரதமர் மோடி விக்ரம் ஷாவின் கடையில் சிறப்பு ஷூட்டிங் நடத்தினார்.

அந்த கடையில் மோடி மட்டுமே காசு கொடுத்து பொரி - மசாலா வாங்கியது போல 5 கேம ராக்களை வைத்து, அவர் பிரச்சார ஷூட்டிங் எடுத்தார்.

இதனை பாஜக ஆதரவு பெற்ற ‘கோடி மீடியா’ ஊடகங்கள் ‘காசு கொடுத்து பொரி - மசாலா வாங்கிய மோடி யின் எளிமை’ என கடுகு வெடித்து படுகாயம் ஏற்பட்டது போல ஊதி பெரிதாக்கின.

இந்நிலையில், மோடி வந்து சென்ற பின் தனக்கு தொலைபேசி, வாட்ஸ் அப் மூலமாக தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருவதாக வும், இதனால் தனது குடும்பத்தி னர் கடுமையான அச்சத்தில் வாழ்வ தாகவும் விக்ரம் ஷா குற்றம் சாட்டி யுள்ளார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,”பிரதமர் மோடி வந்து சென்ற பின்பு பாகிஸ்தான், வங்கதேசத்துடன் தொடர்புடைய எண்களில் இருந்து எனக்கு தொடர்ச்சியாக கொலை மிரட்டல் வருகிறது.

மிரட்டல் விடுத்த நபர் கள் வங்காளம், இந்தி மொழிகளில் மோடி வந்து சென்றதால் அவரது சாலையோரச் சிறிய கடையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக பலமுறை எச்சரித்துள்ள னர்.

எந்த நேரமும் எனக்கு போன் செய்கிறார்கள்.

சிலர் வீடியோ கால் செய்து, கேமராவில் ஆயுதங்க ளைக் காட்டுகிறார்கள். எனது கடையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாக மிரட்டு கிறார்கள்.

மோடி எனது கடைக்கு வந்ததால் தான் என்னை இலக்கு வைப்பதாகக் கூறுகிறார்கள்” என செய்தியாளர்களிடம் கண்ணீ ருடன் கூறியுள்ளார்.

கடைக்கு யாரும் வருவதில்லை வெடிகுண்டு மிரட்டல்கள் வருவதால் விக்ரம் ஷாவின் பொரி - மசாலா கடைக்கு வர உள்ளூர் மக்கள் அஞ்சுகின்றனர்.

இதனால் அவரின் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என செய்தி கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக விக்ரம் ஷா வாழும் பகுதியான ஜார்கிராம் பதற்றத்தில் இருப்பதா கவும் கூறப்படுகிறது.