மோடியின் சுதந்திர தினப் பேச்சுக்குத் தீவிரமடையும் எதிர்ப்பு உருவானது ‘அறிவுஜீவி நக்சல்கள் கட்சி’ 30 மணிநேரத்தில் 1.7 லட்சம் பின்தொடர்பாளர்கள்
17 Aug 2026, 9:27 pm

மோடியின் சுதந்திர தினப் பேச்சுக்குத் தீவிரமடையும் எதிர்ப்பு உருவானது ‘அறிவுஜீவி நக்சல்கள் கட்சி’ 30 மணிநேரத்தில் 1.7 லட்சம் பின்தொடர்பாளர்கள்

பதுதில்லிநாட்டின் 80 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டுத் தில்லிசெங்கோட்டையில் பிரதமர்மோடி, நாட்டின் பொருளாதார இலக்குகள் மற்றும் இளைஞர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்துப் பேசினார். ஆனால், லட்சக்கணக்கான இளைஞர்களை வீதிக்குத் தள்ளியதேர்வு முறைகேடுகள் மற்றும் ஜந்தர் மந்தர் ஒடுக்குமுறைகள் குறித்து ஒரு வார்த்தைகூடப் பேசாமல், மாறாகப் போராடும் மாணவ - இளைஞர்களை ‘அறிவுஜீவி நக்சல்கள்’ (Dimagi Naxals) என்ற புதிய பதத்தின் மூலம் எதிர்க்கும் குரல்களை முடக்கவும் மிரட்டல்விடும் தொனியிலும் பேசினார்.

இந்நிலையில், பிரதமர் மோடியின் சுதந்திர தினப் பேச்சுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருகிறது. குறிப்பாக, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியைப் போல, ‘அறிவுஜீவி நக்சல்கள் கட்சி’ (திமாகிநக்சல் பார்ட்டி - Dimagi Naxal Party - DNP) என்றபுதிய இணையதள கட்சியும்உருவாகியுள்ளது. “அச்சமற்றிருங்கள்; சிந்தியுங்கள்; கேள்வி கேளுங்கள்” என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள இந்த இணையதள கட்சிக்கு ஆதரவு பெருகி வருகிறது.

இந்தக் கட்சியின் இன்ஸ்டாகிராம் கணக்கு சமூக ஊடகங்களில் விரைவாகக் கவனம் பெற்று, வெறும் 30 மணிநேரத்தில் 1.7லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களை (பாலோவர்ஸ்) எட்டியுள்ளது. நகைச்சுவை நடிகர்கள் குணால் கம்ரா, ஷ்யாம் ரங்கீலா, யூடியூபர்துருவ் ரதீ, நடிகர் பிரகாஷ் ராஜ், திரைப்பட இயக்குநர் அனுராக் காஷ்யப், நடிகை சோனாக்சி சின்ஹா, சமூகஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் பத்திரிகையாளர் ரவீஷ் குமார் உள்ளிட்ட பல முக்கியப் பொது நபர்களைஅறிவுஜீவி நக்சல்கள் கட்சி பின்தொடர்கிறது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் இணைந்து செயல்படுவோம் என ‘அறிவுஜீவி நக்சல்கள் கட்சி’ அறிவித்துள்ளது. அதேபோல, கரப்பான்பூச்சி ஜனதா கட்சியும் அறிவுஜீவி நக்சல்கள்கட்சிக்கு வலுவான ஆதரவு தருவோம் எனஅறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.