தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

இத்தாலி, அயர்லாந்து கொடியை அணிந்து இந்தியாவின் தேசியக் கொடியை ‘அவமதித்த’ மோடி

16 Aug 2026, 9:01 pm
இத்தாலி, அயர்லாந்து கொடியை அணிந்து  இந்தியாவின் தேசியக் கொடியை ‘அவமதித்த’ மோடி

இத்தாலி, அயர்லாந்து கொடியை அணிந்து இந்தியாவின் தேசியக் கொடியை ‘அவமதித்த’ மோடி

புதுதில்லிஇந்தியாவின் 80 ஆவது சுதந்திர தினம் சனியன்று நாடு முழுவதும் உற்சாகமாகக் கொண் டாடப்பட்டது. பிரதமர் மோடி தில்லி செங்கோட்டையில் 13 ஆவது முறையாகத் தேசியக் கொடியேற்றி உரையாற்றினார்.

வழக்கம்போல் வெள்ளை உடை, ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், சிறப்பு முண்டாசுப் பாகையுடன் வருகை தந்த

பிரதமர் மோடி, ஸ்லீவ்லெஸ் ஜாக் கெட்டின் “கோட் பாக்கெட் ஹேண்ட் கர்ச்சீப்” இடத்தில் தேசியக் கொடி

யையும் வைத்திருந்தார். ஆனால், அந்தத் தேசியக் கொடி தலைகீழாக இருந்தது. அதாவது, இத்தாலி மற்றும்

அயர்லாந்து கொடியைப் போல முதலில் பச்சை நிறமும், அடுத்து வெண்மை நிறமும், இறுதியில் செம்மஞ்சள் (காவி) நிறமும் இருந்தது. இந்தியத் தேசியக் கொடியோ செம்மஞ்சள், வெண்மை, பச்சை என வரிசை கொண்டது. இந்நிலையில், இந்தியச் சுதந்திர தின நிகழ்வில் இத்தாலி மற்றும் அயர்லாந்து கொடியை அணிந்து தேசியக் கொடியை அவமதித்த பிரதமர் மோடிக்கு நாடு முழுவதும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. மேலும், தேசியக் கொடியை அவமதித்த பிரதமர் மோடியின் காணொளி சமூக வலைத்தளங்களில் கண்டனங்களுடன் வைரலாகி வருகிறது.

மோடி பேசியபோது ஒன்றிய அமைச்சர்கள் தூக்கம்

பிரதமர் மோடி தில்லி செங் கோட்டையில் சுமார் 40 நிமிடங்களுக்கு மேல் உரையாற்றினார். அதாவது, “பெரிய கனவுகளைக் காண வேண்டும்; 2047 ஆம் ஆண்டிற்குள் சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும்” எனப் பேசிக் கொண்டிருந்தார். ஆனால், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான் உள்ளிட்ட சில ஒன்றிய அமைச்சர்கள், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் வீரேந்திர குமார் உள்ளிட்ட எம்பிக்கள், நாட்டின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் எனப் பெரும்பாலானோர் நன்றாகத் தூங்கிவிட்டனர். மோடியும் தனது முழுசக்தியையும் வெளிப்படுத்தி உரை நிகழ்த்திய பொழுதிலும், யாரும் கண்டுகொள்ளவில்லை. எப்பொழுது அவரதுஉரை முடியும் என ஒன்றிய பாஜக அமைச்சர்கள் உறக்கத்தில் காத்திருந்தனர். இதுதொடர்பான காணொளி சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது.

டெலிபிராம்டர் இல்லாமல் திணறிய மோடி

டெலிபிராம்டர் (Teleprompter) என்பது பேசுபவர் கேமராவைப் பார்த்துக் கொண்டே தான் படிக்க வேண் டிய உரையை அல்லது குறிப்புகளைத் திரையில் பார்க்க உதவும் ஒரு சாதனமாகும். இந்தியோ, ஆங்கிலமோ என ஏதுவாக இருந்தாலும், டெலிபிராம்டர் இல்லாமல் பிரதமர் மோடி பொது இடங்களில் பேசுவதில்லை.இந்நிலையில், சுதந்திர தின விழா மேடையில் டெலிபிராம்டர் வைக்கக் கட்டுப் பாடு இருப்பதால், துண்டுச் சீட்டு அல்லது டேப்லெட்டைப் பார்த்துக்கொண்டே சனியன்று உரையாற்றினார்.

3 வினாடிக்கு ஒருமுறை கீழே குனிந்து உரையைப் பார்த்து, பிரதமர் மோடி மிகவும் திணறிய நிலையில்தான் பேசினார். இதில் சில உளரல்களும் இருந்தன. மோடி பேசிய உரைத் தொகுப்பு சிறியதுதான்; ஆனால், துண்டுச் சீட்டு அல்லது டேப்லெட்டைப் பார்த்துத் கீழே குனிந்து வாசிக்க மிகவும் நேரம் எடுத்ததுடன், சுமார் 30 நிமிடங்களுக்கு மேல் ஆனது.

மோடி, அமித் ஷா உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள் “வந்தே மாதரம்” பாடவில்லை

பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்தபோது 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. அதேவேளையில், இந்திய விமானப் படையின் இரண்டு எம்.ஐ-17 ரக ஹெலிகாப்டர் கள் மலர் தூவ, ஒன்றில் தேசியக் கொடியும் மற்றொன்றில் ‘வந்தே மாதரம்’ பொறிக்கப்பட்ட கொடியும் பறக்கவிடப்பட்டன.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து ராணுவ இசைக் குழுவினர் ‘வந்தே மாதரம்’ பாடலை முழுமையாக இசைக்க, அதனைத் தொடர்ந்து தேசிய கீதமான ‘ஜன கண மன’ இசைக்கப்பட்டது. 150 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க ‘வந்தே மாதரம்’ பாடல் சுதந்திரத்திற்குப் பிறகு செங்கோட்டை விழாவில் இசைக்கப்பட்டது இதுவே முதன்முறை எனப் பிரதமர் மோடி தனது உரையில் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

ஆனால், பிரதமர் மோடி, ஒன் றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர் கள், பாஜக மூத்த தலைவர்கள் போன்றோர் செங்கோட்டை சுதந் திர தினவிழாவில் “வந்தே மாதரம்” பாடவில்லை. பிரதமர் மோடி கேமரா தன் பக்கம் திரும்பும்போது வாயை மட்டுமே அசைத்தார்; அவர் பாடவில்லை. அதேபோல, அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட

ஒன்றிய பாஜக அமைச்சர்கள் வெறுமனே நின்றுகொண்டிருந்தனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பான காணொளி வைரலான பின்புதான், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி பாதியிலேயே நிறுத்தச் சொல்லி ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்துவிட்டார் எனப் கூப்பாடு போட ஆரம்பித்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.