தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

“நகை வாங்க வேண்டாம்” என்ற பிரதமரின் வேண்டுகோள்: 5 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நகை வியாபாரிகள் கூட்டமைப்பு கவலை

11 May 2026, 9:28 pm
“நகை வாங்க வேண்டாம்” என்ற பிரதமரின் வேண்டுகோள்: 5 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும்  நகை வியாபாரிகள் கூட்டமைப்பு கவலை

“நகை வாங்க வேண்டாம்” என்ற பிரதமரின் வேண்டுகோள்: 5 கோடி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நகை வியாபாரிகள் கூட்டமைப்பு கவலை

கோவை, மே 11- “தங்கம் இறக்குமதியால் அந்நி யச் செலாவணி பாதிக்கப்படுவதால் மக்கள் தங்கம் வாங்குவதை ஓராண்டிற்குத் தள்ளிப்போட வேண்டும்” என்று பிரதமர் மோடி விடுத்துள்ள வேண்டுகோள், நகைத் தொழில் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறி விப்பால் இத்தொழிலை நம்பியுள்ள 5 கோடி தொழிலாளர்களின் எதிர் காலம் சிதைந்துவிடும் என்று கூட்ட மைப்பு வேதனை தெரிவித்துள்ளது.

நெருக்கடியில் நகைத்தொழில் பிரதமரின் இந்தப் பேச்சு குறித்து தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைர நகை வியாபாரிகள் கூட்டமைப்பின் தலைவர் சபரிநாதன் விடுத்துள்ள அறிக்கையில், “இந்திய அளவில் நகைத்தொழிலை நம்பி சுமார் 5 கோடி மக்கள் உள்ளனர்.

இதில் சுமார் 2.5 கோடி பேர் நேரடியாக நகை உற்பத்திப் பணிகளில் ஈடுபட்டு அன்றாடம் பிழைப்பு நடத்தி வரு கின்றனர்.

ஏற்கெனவே தங்கத்தின் விலை உயர்வு காரணமாக இத்தொழில் 40 சதவீதம் வரை கடும் சரிவைச் சந்தித்துள்ளது.

இத்தகைய இக்கட்டான சூழலில், நாட்டின் பிரதமரே இப்படி ஒரு கருத்தைச் சொல்லியிருப்பது எங்க ளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் சிதைப்பது போல் உள்ளது” என்று அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

பண்பாடும் வாழ்வாதாரமும் தங்கம் என்பது இந்தியப் பண்பாட்டில் வெறும் அலங்காரப் பொருள் மட்டுமல்ல, அது திரு மணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சி களுக்கும், சாமானிய மக்களின் அவசர காலச் சேமிப்பிற்கும் அடிப்ப டையானது. “

அண்டை நாடான சீனாவில் அதன் பிரதமர் அந்நாட்டு மக்களைத் தங்கத்தில் முதலீடு செய்ய ஊக்குவித்து வரும் வேளை யில், இந்தியப் பிரதமர் அதற்கு மாறான ஒரு கருத்தை முன்வைப்பது வருத்தமளிக்கிறது.

வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்கச் சொல்ல லாம் அல்லது ஆடம்பரச் செலவு களைக் குறைக்கச் சொல்லலாம்.

ஆனால், சாதாரண மக்களின் சேமிப்பு ஆதாரமான தங்கம் வாங்கு வதை நிறுத்தச் சொல்வது எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல” என அவர் குறிப்பிட்டார்.

ஆக்கப்பூர்வமான தீர்வுகளுக்கான கோரிக்கை தங்கம் இறக்குமதியைக் குறைக்கத் தேவையான ஆலோ சனைகளை ஏற்கெனவே ஒன்றிய அரசுக்கு வழங்கியுள்ளதாகக் குறிப்பிட்ட சபரிநாதன், இந்தியப் பெண்களிடம் பயன்பாடின்றி இருக்கும் சுமார் 25,000 டன் தங்கத்தைத் ‘தங்கம் பணமாக்கல் திட்டம்’ மூலம் திரட்டி, வங்கிகள் மூலம் டெபாசிட் திட்டங்களாகச் செயல் படுத்தினால் இறக்குமதியைக் கணிசமாகக் குறைக்க முடியும் என்று சுட்டிக்காட்டினார்.

அத்தகைய நடைமுறைத் தீர்வுகளைச் செய்யா மல், ஒட்டுமொத்தத் தொழிலையும் பாதிக்கும் வகையில் அறிவிப்பு களை வெளியிடுவது வேதனை யளிப்பதாக அவர் கூறினார்.

விலை ஏற்றத்தால் ஏற்கெனவே முடங்கியுள்ள இத்தொழிலை மீட்டெடுக்கவும், லட்சக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களின் அடுப்பு எரிவதை உறுதி செய்யவும், பிரதமர் தனது கோரிக்கையை மறுபரிசீல னை செய்ய வேண்டும் என்பதே இத்துறையினரின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.