தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தேர்தல் விதிமீறல் - பிரதமர் மோடி மீது எம்.ஏ.பேபி புகார்!

19 Apr 2026, 6:22 pm
தேர்தல் விதிமீறல் - பிரதமர் மோடி மீது எம்.ஏ.பேபி புகார்!

தேர்தல் விதிகளை மீறி அரசு தொலைக்காட்சியில் பிரதமர் மோடி அரசியல் ரீதியாக உரையாற்றியதை எதிராக தேர்தல் ஆணையத்தில் சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி புகார் அளித்துள்ளார்.

மக்களவையில், கடந்த ஏப்ரல் 17-ஆம் தேதி தொகுதி மறுவரையறை மசோதாக்கள் உள்ளடக்கிய மகளிர் இட ஒதுக்கீடு மீதான வாக்கெடுப்பில் இம்மசோதாக்கள் தோல்வியடைந்தன. இதை தொடர்ந்து நேற்று பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதில், காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளால் இம்மசோதா தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிவித்தார். மேலும், மகளிரின் கவுரவத்தை எதிர்க்கட்சிகள் காயப்படுத்தியதாகவும், இந்த அவமானத்தை பெண்கள் மறக்க மாட்டார்கள், இதற்கு நிச்சயம் எதிர்க்கட்சிகளுக்கு தண்டனை கிடைக்கும் எனவும் பேசியிருந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், அரசு தொலைக்காட்சியான தூர்தர்ஷனைத் தவறாகப் பயன்படுத்தி அரசியல் உரையை பிரதமர் மோடி ஆற்றியுள்ளார்; பிரதமரின் உரை அப்பட்டமான அரசியல் தன்மையைக் கொண்டிருக்கிறது; எதிர்க்கட்சிகள் பலவற்றின் பெயர்களைக் குறிப்பிட்டு அவற்றை இலக்காகக் கொண்டதுடன், ஆளும் கட்சிக்குச் சாதகமாகவும், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க வாக்காளர்களின் கருத்தை—மாற்ற முயலும் வகையிலும் அமைந்திருந்தது என சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளார். மேலும், பிரதமர் மற்றும் இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது உடனடியாக தகுந்த நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் பிரமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.