தீக்கதிர் விரைவு செய்திகள்
6 Jun 2026, 9:12 pm

பொருளாதார நிபுணர்களுடன் பிரதமர் ஆலோசனை

புதுதில்லி, ஜூன் 6- அமெரிக்கா - ஈரான் போரால் சர்வதேச அளவில் எரிசக்தி நெருக்கடி ஏற்பட் டுள்ளது. உலகின் 20 சத விகித எண்ணெய் வர்த்தகம் நடைபெறும் முக்கிய கப்பல் வழித்தடமாக உள்ள ஹோர் முஸ் நீரிணை போக்கு வரத்தை ஈரான் தனது கட் டுப்பாட்டில் கொண்டு வந் துள்ளது. இதனால், எரி பொருள் விநியோகம் பாதிக் கப்பட்டுள்ளது. இந்தியா வில், கடந்த சில நாட்களில் மட்டும் 8 ரூபாய் அளவுக்கு எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந் நிலையில், மேற்கு ஆசிய போர் காரணமாக ஏற்பட் டுள்ள நெருக்கடி தொடர் பாக பொருளாதார ஆலோ சனைக் குழுவினருடன் பிரத மர் மோடி முக்கிய ஆலோ சனை நடத்தினார்.

மீண்டும் குறைந்த தங்கம் விலை

சென்னை, ஜூன் 6 - 22 காரட் ஆபரண தங் கத்தின் விலை கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நிலையில், சனிக்கிழமை (ஜூன் 6) அன்று பவுனுக்கு ரூ. 1,840 குறைந்து ரூ. 1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கு விற்பனையானது. ஜூன் 4 அன்று 22 காரட் ஆப ரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு 20 ரூபாயும், ஜூன் 5 அன்று கிராமிற்கு 50 ரூபா யும் மட்டுமே குறைந்த நிலை யில், ஜூன் 6 அன்று கிரா மிற்கு 230 ரூபாய் அளவிற்கு விலை குறைந்தது.