தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மோடி உபதேசிக்கிறார்... தியாகம் செய்ய வேண்டுமாம்!

11 May 2026, 8:59 pm
மோடி உபதேசிக்கிறார்...  தியாகம் செய்ய வேண்டுமாம்!

மோடி உபதேசிக்கிறார்... தியாகம் செய்ய வேண்டுமாம்!

உலகளாவிய பொருளாதார நெருக்கடிகள் மற்றும் எரிசக்தி தட்டுப்பாடுகளைக் காரணம் காட்டி, நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள வேண்டுகோள் தர்க்கத்திற்குப் புறம்பாகவும், சாதாரண மக்களின் வாழ்வா தாரத்தைப் புறக்கணிப்பதாகவும் உள்ளது. பெட்ரோல், டீசல் பயன்பாட்டைக் குறைக்கவும், வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்க்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், இத்தகைய நெருக்கடிகளுக்குத் தீர்வுகாண வேண்டிய அரசாங்கம், தன் தோல்விகளை மறை க்க தேசபக்தி என்ற போர்வையில் மக்களின் நுகர்வின் மீது பழியைப் போடுவது கண்டிக்கத்தக்கது.

சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும்போது அதன் பலனை மக்களுக்கு வழங்காமல், வரலாறு காணாத கலால் வரிகள் மூலம் மக்கள் பாக்கெட்டைப் பறித்து, தமது கூட்டுக் களவாணி நண்பர்களின் கஜானாவை நிரப்பியவர் தான் இந்தப் பிரதமர். இப்போது எரிசக்தி நெருக்கடி என்று கூறி பொது மக்களைக் கட்டுப்படுத்தச் சொல்வது வேடிக்கை யானது. பொதுப் போக்குவரத்தை மேம்படுத்து வதிலும், மின்சார வாகனங்களுக்கான உள்கட்ட மைப்பை உருவாக்குவதிலும் போதிய வேகம் காட்டாத அரசு, இப்போது மெட்ரோ ரயில் மற்றும் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்து மாறு உபதேசம் செய்வது பொறுப்பற்றத்தனமானது.

காலணி முதல் சமையல் எண்ணெய் வரை உள்நாட்டுத் தயாரிப்புகளைப் பயன்படுத்துமாறு பிரதமர் வலியுறுத்துகிறார். ஆனால், கடந்த பத்தாண்டுகளில் தவறான ஜிஎஸ்டி மற்றும் பணமதிப்பு நீக்க நடவடிக்கைகளால் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் நலிவடைந்து போவதைத் தடுக்க இந்த அரசு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்குச் சிவப்பு கம்பளம் விரித்துவிட்டு, இறக்குமதியைச் சார்ந்திருக்கும் நிலையை உருவாக்கியதே அரசின் தவறான பொருளாதாரக் கொள்கைகள்தான். உள்நாட்டு உற்பத்தியைப் பெருக்காமல், “உள்ளூர் தயாரிப்பு களை வாங்குங்கள்” என்று முழங்குவது வெறும் அரசியல் விளம்பரமாகவே முடியும்.

ரசாயன உரப் பயன்பாட்டை 50 சதவீதம் வரை குறைக்குமாறு விவசாயிகளுக்கு அறிவுரை வழங்குகிறார் மோடி. போதுமான அறிவியல் பூர்வமான மாற்றுகளை வழங்காமல், இடு பொருள் செலவு உயர்வால் ஏற்கெனவே தத்த ளிக்கும் விவசாயிகளை இயற்கை விவசா யத்திற்கு திடீரென மாறுமாறு வற்புறுத்து வது அவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதை க்கும் செயலாகும். மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்துவதும், அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் குறைப்பதும் ஒரு மக்கள் நல அரசின் கடமையாகும். ஆனால், இங்கே அரசோ கார்ப்பரேட் வரிச்சலுகைகளை வாரி வழங்கி விட்டு, சாமானிய மக்களை “சிக்கனமாக இருங்கள்” என உபதேசிக்கிறது. தங்கத்தின் மீதான மோகத்தை விடுங்கள், வெளிநாட்டுப் பயணங் களை நிறுத்துங்கள் என கூறுவது அரசின் நிர்வாகத் தோல்வியை திசைதிருப்பும் முயற்சி யாகும். பொருளாதாரத்தைச் சீரமைக்க வேண்டிய ஒன்றிய அரசு, தனது கொள்கை ரீதியான தோல்விகளை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, தேசபக்தி என்ற போர்வையில் சாமானிய மக்களின் அன்றாடத் தேவைகளில் கைவைப்பது ஒருபோதும் தீர்வாகாது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.