தேர்தல் வந்தால் மட்டுமே மோடி வழிவிடுவாரா?
17 Aug 2026, 9:25 pm

தேர்தல் வந்தால் மட்டுமே மோடி வழிவிடுவாரா?

புதுதில்லிநாட்டின் 80 ஆவது சுதந்திர தினம் சனியன்று கொண்டாடப்பட்டது. இந்தக் கொண்டாட்டத்திற்காகத் தில்லிலோக் கல்யாண் மார்க்கில் உள்ள பிரதமர் இல்லத்திலிருந்து, நரேந்திர மோடி 8 க்கும் மேற்பட்ட கான்வாய் வாகன ஊர்வலத்துடன் செங்கோட்டைக்குச் சென்றார். தில்லி ரேஸ்கோர்ஸ் சாலை அருகே பிரதமர் மோடியின்

கான்வாய் வாகன ஊர்வலம் சென்றபோது, அவசர சிகிச்சைக்குச் செல்ல ஆம்புலன்ஸ் ஒன்று

வந்தது. ஆனால், பாதுகாப்புப் படையினர் ஆம்புலன்ஸுக்கு வழிவிட மறுத்தனர்.

அதேபோல, ஆம்புலன்ஸ் வாகனத்தைக் கண்டும் பிரதமர் மோடி வழிவிடச் சொல்லவில்லை; 20 கி.மீ. வேகத்தில் சென்றகான்வாய் வாகனத்தை வேகமாகவும் செல்ல அவர் உத்தரவிடவில்லை. கிட்டத்தட்ட 20 நிமிடத்திற்கு மேலாக ஆம்புலன்ஸ் அங்கே சிக்கிக்கொண்டுவிட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலுக்காக மட்டும் ஷூட்டிங்

பொதுவாக, மக்களவை அல்லது மாநிலங்களுக்குத் தேர்தல் நடந்தால், பிரதமர் மோடி பிரச்சாரத்திற்குச் செல்லும் இடங்களில் ஆம்புலன்ஸ் வழிவிட்டதாகச்செய்திகள் கண்டிப்பாக வெளியாகும். ஆம்புலன்ஸ் வழிவிடுதல் செய்தி இல்லாமல் பிரதமர் மோடியின் தேர்தல் பிரச்சாரமே நடைபெற்றதே கிடையாது. பாஜக ஆதரவு கோடீஸ்வர ஊடகங்கள், “தேர்தல் பிரச்சாரத்தைப் பொருட்படுத்தாமல் ஆம்புலன்ஸுக்குவழிவிட்ட மாமனிதர் மோடி; இதற்காக அவருக்கு நோபல் பரிசு தரவேண்டும்” எனச் செய்தி வெளியிட்டு, விசுவாசத்தை வெளிப்படுத்துவது வழக்கம்.

ஆனால், இதெல்லாம் தேர்தலுக்கான நாடகம் எனத் தற்போது அம்பலமாகியுள்ளது. சுதந்திர தின கொண்டாட்டநேரத்தில் தேர்தல் எதுவும் இல்லாத காரணத்தினால், பிரதமர் மோடி செங்கோட்டைக்குச் செல்லும் போதுஆம்புலன்ஸுக்கு அவர் வழிவிடவில்லையா எனச் சமூக வலைத்தளங்களில் காணொளிஆதாரங்களுடன் கேள்விகள் கிளம்பியுள்ளன. மேலும், பிரதமர் மோடி ஆம்புலன்ஸுக்கு வழிவிடாத காணொளிசமூக வலைத்தளங்களில் டாப் டிரெண்டிங்கில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மோடிக்காக செங்கோட்டைக்குள் 10 கேமராக்களுடன் ஷூட்டிங்

சில மாதங்களுக்கு முன்பு, “நாட்டில் நெருக்கடியான சூழல் இருக்கிறது; அதனால் வாகனங்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்” என்று கூறிய பிரதமர் மோடி, சுதந்திர தின கொண்டாட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுப்புடன் (ராணுவ அணிவகுப்பு அல்ல - கான்வாய்) செங்கோட்டைக்குச் சென்றார். செல்லும் வழி

யெல்லாம் கேமராக்களுடன்தான் மோடியின் ஊர்வலம் நடைபெற்றது. செங்கோட்டை கோபுரத்திலிருந்தும்கூட, மோடியின் “ஆமை வேக வாகன ஊர்வலம் (மிக மெதுவாகச் சென்றமையால்)” காட்சிப்படுத்தப்பட்டது. அதேபோல, செங்கோட்டைக்குள்ளேயும் பிரதமர் மோடிக்காக 10 கேமராக்கள் ஷூட்டிங் எடுத்தன. மோடிக்காக மட்டும் செங்கோட்டைக்குள் 20 கேமரா பணியாளர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.