முந்தய பக்கம்

ஈரானுக்கு மோடி திடீர் கண்டிப்பு

5 May 2026, 10:01 pm
ஈரானுக்கு மோடி திடீர் கண்டிப்பு
<p><strong>ஈரானுக்கு மோடி திடீர் கண்டிப்பு</strong></p><p>புதுதில்லி, மே 5 - இந்தியாவின் நட்பு நாடான ஈரா னை பிரதமர் நரேந் திர மோடி திடீரென கடுமையாகக் கண்டித்துள்ளார். அமெரிக்காவின் ராணுவத் தாக்குதலுக்குத் தளம் அமைத்துக் கொடுத்துள்ள ஐக்கிய அரபு அமீரகத்தின் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா பெட்ரோலியத் தொழில் மண்டலத்திலும் ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இத்தாக்குதல்களில் எதிர்பாராத விதமாக அங்கு பணியாற்றி வந்த மூன்று இந்தியர்கள் படுகாயம் அடைந்த நிலையில், பிரதமர் மோடி ஈரானுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார். “பொதுமக்களையும் உட்கட்ட மைப்புகளையும் இலக்கு வைத்துத் தாக்குவது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று” என்று சமூகவலை தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டுச் சேர்ந்து, ஈரான் மீது நடத்தும் அராஜகமான யுத்தமே, இந்தியா உட்பட உலக நாடுகளின் பொருளா தாரத்தை பாதித்து வருகிறது. எனினும் அமெரிக்காவை இதுவரை பிரதமர் மோடி கண்டிக்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.</p>
Share
FacebookXWhatsAppTelegram