மோடி மட்டும் குடியுரிமையை நிரூபிக்க மாட்டாரா? அவருக்கு மட்டும் விலக்கு ஏன்? நாடு முழுவதும் எழும் கேள்விக்கணைகள்
yesterday

மோடி மட்டும் குடியுரிமையை நிரூபிக்க மாட்டாரா? அவருக்கு மட்டும் விலக்கு ஏன்? நாடு முழுவதும் எழும் கேள்விக்கணைகள்

2020ஆம் ஆண்டு ஜனவரி 17 அன்று ஸ்ரீசுபங்கர் சர்க்கார் என்பவர் பிரதமர் மோடியின் குடியுரிமையை நிரூபிக்கக் கோரியும், அவரது பாஸ்போர்ட், வாக்காளர் அட்டை அல்லது அரசுஆவணங்களுடன் குடியுரிமைச் சான்றிதழை அளிக்க வேண்டும் என தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்டிஐ)மனுதாக்கல் செய்தார்.

ஆனால் இந்த மனு தொடர்பாக பிரதமர் அலுவலகம்,”மோடி 1955ஆம் ஆண்டின் குடியுரிமைச் சட்டத்தின் பிரிவு 3இன் படி பிறப்பால் இந்தியாவின் குடிமகன் ஆவார். எனவே, பதிவின் மூலம்பெறப்படும் குடியுரிமைச் சான்றிதழ் அவரிடம் இருப்பதற்கான கேள்வி இங்கு எழவில்லை” என மழுப்பலாக பதில் அளித்தது.

2020ஆம் ஆண்டு நிகழ்ந்த, இந்த நிகழ்வு 6 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது வைரலாகி வருகிறது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்தஅரசியல் விமர்சகர் குமார் ஆர்.தாலுக்தர் இந்நிகழ்வை டிரெண்டிங் செய்துள்ளார்.

பிரதமர் மோடியின் குடியுரிமை தொடர்பான ஆர்டிஐ பதில்அறிக்கையை தனது டுவிட்டர்எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு,“இந்தியாவில் பிறந்த குடிமக்களுக்கு ஆவணங்கள் மூலமாகவே குடியுரிமையை நிரூபிக்கும் சூழல் உள்ளது. ஆனால், நாட்டின் உயர்பதவிகளில்உள்ளவர்கள் (மோடி உட்பட) அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பதிவுகள், பிறப்புத் தரவுகளின் அடிப்படையிலேயேஅவர்களின் குடியுரிமை உறுதிப்படுத்தப்படுகிறது” என அரசியல் விமர்சகர் குமார் ஆர்.தாலுக்தர் கூறினார்.

தாலுக்தரின் பதிவை ஷேர்செய்து,”மோடிக்கு ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயமா? மோடி மட்டும் குடியுரிமையை நிரூபிக்க மாட்டாராஅவருக்கு மட்டும் விலக்கு ஏன்?. நாட்டில் அனைவரும் சமம்” என சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் அளவில் கேள்வி எழுந்து வருகிறது.