தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பிரிக்ஸ் மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களுக்குச் சைவ உணவை மட்டுமே வழங்கிய பிரதமர் மோடி

13 Sept 2026, 9:20 pm
பிரிக்ஸ் மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களுக்குச் சைவ உணவை மட்டுமே வழங்கிய பிரதமர் மோடி

பிரிக்ஸ் மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களுக்குச் சைவ உணவை மட்டுமே வழங்கிய பிரதமர் மோடி

புதுதில்லி18ஆவது பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளின் உச்சிமாநாட்டை இந்தியா தலைமை ஏற்று நடத்தி வருகிறது. தில்லி ‘பாரத் மண்டபத் தில்’ சனியன்று தொடங்கிய இந்த மாநாடு ஞாயிறன்று நிறைவுபெற்றது.இந்நிலையில், இம்மாநாட்டில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்களுக்குப் பிரதமர் மோடி சனியன்று இரவு பாரத் மண்டபத்தில் சிறப்பு விருந்து அளித்தார்.

நீராவியில் வேகவைக்கப்பட்ட கடலை மாவு ரோல்; புதினா முத்துக்களுடன் கூடிய காளான் மசாலா; பன்னீர்லபாப்தார்; இமயமலை மோரல் காளான்கள் கிரேவி; கேரட் பீன்ஸ் பொரியல் ஆகியவை இடம்பெற்றன. இதுதவிர, தக்காளிச் சாறு, சிறுதானியப் புலாவ், பீட்ரூட் ரைதா மற்றும் பலவகை இந்திய ரொட்டி வகைகள், ஐஸ்கிரீம், ஓல்ட் டெல்லி ப்ரூட் கிரீம் மற்றும் ஷாத்தூர் பிர்னி உள்ளிட்ட சைவ உணவுகள் மட்டுமே பரிமாறப்பட்டன. அசைவ உணவுகள் பரிமாறப்படவில்லை. பொதுவாக உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு என்றால், சைவம் -அசைவம் என இரண்டும் இருக்கும்; அவரவர் விரும்பிய உணவுகளைச் சாப்பிட்டுக் கொள் ளலாம் என்றே ‘உணவு மெனு’ தயாரிக்கப்படும். ஆனால், பிரதமர் மோடியின் விருந்தில் சைவ உணவுகள் மட்டுமே இடம்பெற்றிருந்தன. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ராகுல் காந்தி கண்டனம்இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி,”80% இந்தியர்கள் அசைவ உணவை உண்பவர்கள். இந்தியாவின் அசைவ உணவுகள் மிகவும் சுவையானவை. இந்திய அசைவ உணவுகளைப் போலவே எனது சகோதரி (பிரியங்கா காந்தி) செய்யும் சோலே பட்டூராவும் மிகவும் சுவையானது” என்று குறிப்பிட்டு, பிரிக்ஸ் மாநாட்டில் உலக நாடுகளின் தலைவர்களுக்குச் சைவ உணவை மட்டுமே வழங்கிய பிரதமர் மோடியின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.