தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஊடகங்கள் முன்பு பிரதமர் மோடி பேச மாட்டாராம் ஒன்றிய அரசு விளக்கம்

12 Jul 2026, 9:15 pm
ஊடகங்கள் முன்பு  பிரதமர் மோடி  பேச மாட்டாராம் ஒன்றிய அரசு விளக்கம்

ஊடகங்கள் முன்பு பிரதமர் மோடி பேச மாட்டாராம் ஒன்றிய அரசு விளக்கம்

பிரதமர் மோடி வெளிநாட்டுப் பய ணங்களின் போது ஏன் வழக்க மான செய்தியாளர் சந்திப்புகளை தவிர்க்கிறார்? என சர்வதேச ஊடகங்கள் தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வரு கின்றனர்.

சமீபத்தில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் போது அந்நாட்டு ஊடகங்கள் மோடிக்கு அருகே நின்று,”மோடி ஏன் ஊடகங்களை கண்டுகொள்ள மறுக்கிறார்? எப்போது செய்தியாளர்களை சந்திப்பார்? என கேள்வி கேட்டு வீடியோ தொகுப்புகளை தலைப்புச் செய்திகளை வெளியிட்டன.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஒன்றிய அரசு வெளியுறவுத்துறை அதிகாரி மூலம் வித்தியாசமான விளக்கம் அளித்துள் ளது.

நியூசிலாந்து பயணத்தின் போது, இந்திய வெளியுறவுத்துறை அமைச்ச கத்தின் அதிகாரி ருத்ரேந்திர டாண்டன் பிரதமர் மோடி ஏன் வெளிநாட்டுப் பய ணங்களின் போது ஊடக சந்திப்புகளில் பங்கேற்பதில்லை என்பது தொடர்பாக அளித்துள்ள விளக்கத்தில்,”இந்திய அர சியல்வாதிகள், குறிப்பாகப் பிரதமர் மோடி, இடைத்தரகர்கள் இன்றி நேரடி யாக மக்களுடன் உரையாடுவதையே அதிகம் விரும்புகிறார்.

இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் கிரா மப்புறப் பின்னணியைக் கொண்டவர் கள்.

அவர்களுக்குப் பிரதமர் நேரடியாகப் பேசுவதே நம்பிக்கையைத் தருகிறது. இந்த நேரடி மக்கள் தொடர்பு உத்தியின் காரணமாகவே, நீண்ட காலம் பிரதம ராகத் தொடரும் ஒரு தலைவராக அவர் அறியப்படுகிறார்” என அவர் கூறினார்.

மக்கள் முன்புதான் பிரதமர் மோடி பேசுவார் ; ஊடகங்கள் முன்பு பேச மாட்டார் என்ற ஒன்றிய அரசின் மழுப்ப லான விளக்கத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.