ஆஸ்திரேலியா சென்றார் பிரதமர் மோடி
8 Jul 2026, 8:31 pm
<p><strong>ஆஸ்திரேலியா சென்றார் பிரதமர் மோடி</strong></p><p>அரசு முறை பயணமாக இந் தோனேசியா சென்றுள்ள பிர தமர் மோடி அப்பயணத்தை முடித்துக்கொண்டு ஆஸ்திரேலியா சென்றுள்ளார் என வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தோனேசியாவில் மூன்று நாள் அரசுமுறைப் பயணத்தில் கனிம வளங் கள், கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் ஒத்து ழைப்பை வலுப்படுத்தும் வகையில் 14 முக்கிய ஒப்பந்தங்களில் மோடி கையெழுத்திட்டுள்ளார் . ஆஸ்திரேலியாவில்பாதுகாப்புத் துறை உறவுகள், முக்கியமான கனிமங் கள் மற்றும் யுரேனியம் விநியோகம் தொ டர்பான பேச்சுவார்த்தைகளில் மோடி ஈடுபட உள்ளார் என தெரிவிக்கப் பட்டுள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியில் சிறுபான்மையினர் ஒடுக்கப்படும் நிலை யில் அதனை கண்டித்து போராட்டங்கள் நடத்தப் போவதாகச் சில அமைப்புகள் அறிவித்துள்ளன. இந்த நாட்டில் பயணத்தை முடித்து விட்டு அவர் நியூசிலாந்து செல்ல உள்ளார்.</p>
